"முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
டெல்லி: இந்தியப் பொருளாதாரம் குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் கூறியிருந்த கருத்துகள் பரபரப்பைக் கிளப்பி இருந்த நிலையில், அதற்கு நமது நாட்டின் சில வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்,
இந்திய ரிசர்வ் வங்கியில் ஆளுநராகக் கடந்த 2013 முதல் 2016 வரை இருந்தவர் ரகுராம் ராஜன். சமீபத்தில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டியில் இந்தியா குறித்தும் இந்தியப் பொருளாதாரத்தில் உள்ள பிரச்சினை குறித்தும் பேசியிருந்தார்.

அதில் அவர் நாட்டில் கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்துவது தான் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரிவித்தார். அப்படி அதைச் சரி செய்யவில்லை இளைஞர்கள் அதிகம் இருந்தும் அதன் பலனை இந்தியா பெறாது என சாடினார்.
ரகுராம் ராஜன்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "விளம்பரங்களை நம்புவதுதான் இப்போது இந்தியா செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு, இந்த விளம்பரங்களை மக்கள் நம்ப வேண்டும் என்பதே அரசியல்வாதிகளின் விருப்பம். ஆனால், இந்த விளம்பரத்தை நம்புவது இந்தியா செய்யும் மிகப் பெரிய தவறாக இருக்கும்" என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், 2047க்குள் இந்தியா வளர்ந்த பொருளாதாரமாக மாறும் பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறாரே என்ற கேள்விக்கு அவர், "உயர்நிலை கல்வியைப் பலர் படிப்பது இல்லை. இடைநிற்றல் விகிதமும் அதிகமாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது இப்படிப் பேசுவது நான் சென்ஸாக இருக்கும். நாம் இந்தியாவில் உள்ள இளைஞர்களை நல்ல வேலைக்குத் தயார்ப்படுத்த வேண்டும். அடுத்து அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
கிளம்பிய எதிர்ப்பு: உயர்கல்விக்கான பட்ஜெட்டை விட, சிப் உற்பத்திக்கான மானியங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவது தவறானது. நமது நாட்டை சிறந்த நாடாக மாற்ற அரசு எதில் கவனம் செலுத்துகிறது என்பதில் கேள்வி இருக்கிறது" என்று அவர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கிடையே ரகுராம் ராஜன் பேச்சுக்கு நமது நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது.
அவரது கருத்துக்களுக்கு நாட்டில் உள்ள சில பொருளாதார வல்லுநர்கள் எதிர்வினையாற்றி உள்ளனர். ரகுராம் ராஜனின் கருத்துகள் முட்டாள்தனமானது என்று விமர்சித்துள்ள அவர்கள், இந்தியாவின் அடிப்படை யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் ரகுராம் ராஜன் பேசியுள்ளதாகவும் சாடியுள்ளனர்.
முட்டாள்தனமானது: இது குறித்து மணிபால் குளோபல் எஜுகேஷன் தலைவர் மோகன்தாஸ் பாய் கூறுகையில், "ரகுராம் ராஜன் கருத்துகள் முட்டாள்தனமானது., பள்ளி இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது, கல்லூரி மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது, பெரிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, பல ஆண்டுகளாக வழங்கப்பட்ட மானியத்தை வருடாந்திர செலவினத்துடன் ஒப்பிடுவது தவறானது" என்று விமர்சித்துள்ளார்.
நிதி ஆயோக் உறுப்பினரும் மேக்ரோ பொருளாதார நிபுணருமான அரவிந்த் விர்மானியும் ரகுராம் ராஜனின் இந்த கருத்துகளை விமர்சித்துள்ளார். இந்தியாவிற்கு இதுவரை வராத சர்வதேச பொருளாதார வல்லுநர் கூறும் கருத்துகளைப் போலவே ரகுராம் ராஜனின் கருத்துகள் இருப்பதாகச் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "1990களின் பி.பிஓ நெருக்கடியின் போது உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச வல்லுநர்கள் இந்தியா வந்தார்கள். அவர்களை பாராசூட் பொருளாதார நிபுணர்கள் என்று அழைப்பார்கள். அவர்களைப் போலத் தான் இந்த முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் கூறும் கருத்துகளும் இருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தில் 50 ஆண்டுகள் பணியாற்றிய நபர் சொல்லும் கருத்துகளைப் போல அது இல்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications