Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேக்ளா பந்தயமும் ஜல்லிக்கட்டும் ஒன்றல்ல: மஹாராஷ்ட்ரா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தின் கீழ் மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் விழா, ஆகியவையும் வருவதால் இவ்விளையாட்டுகளை நடத்துவது தொடர்பாக கேள்வி எழுப்ப முடியாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சட்டம் இயற்றி நடத்துவதுபோல மகாராஷ்டிராவில் ரேக்ளா பந்தயத்துக்கு அனுமதி அளிக்கக்கோரிய மகாராஷ்டிரா அரசின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் பதிலளிக்கும் வகையில் தமிழக அரசுக்கும் மனுவை வழங்க மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வாரம் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி ரேக்ளா பந்தயம் தொடர்பான மகாராஷ்டிரா அரசின் மேல்முறையீட்டு மனுவை பெற்ற தமிழக அரசு, அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு உசாநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது.

Ragla betting and Jallikattu are not same: TN Govt in Supreme Court

"மகாராஷ்டிராவில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தோடு, தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கடை ஒப்பிட முடியாது, தமிழகத்தில் கலாச்சாரம், பண்பாட்டோடு கலந்த பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு ஆகும் . தமிழகத்தை பொறுத்தவரை ஜல்லிக்கட்டு மக்களோடு ஒன்றிபோன விஷயம் ஆகும். மேலும் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நடைமுறைகள் மாநிலங்களின் அதிகார பட்டியலில் வருவதால், ஜல்லிக்கட்டை நடத்த சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் எந்த விலங்குகளும் துன்புறுத்தப்படுவதில்லை, உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது, இதில் எந்த விதி மீறலும் நிகழ்வதில்லை. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு உரிய உணவு, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, உரிய தகுதி இருந்தாலே அந்த காளை போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது

அதேபோல் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கும் உரிய உடல் தகுதி , மருத்துவ தகுதி சான்றிதழ் வைத்திருந்தலே அனுமதிக்கப்படுவர். இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை. ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது விடும் விழா, வடமாடு, உள்ளிட்டவையும் அடங்கும்.

எனவே ஜல்லிக்கட்டு சட்டத்தை வைத்துக்கொண்டு எருது விடுதல், மஞ்சு விரட்டு உள்ளிட்ட இணை விளையாட்டுகளை எப்படி நடத்த முடியும் என்று மகாராஷ்டிரா கேள்வி எழுப்ப இங்கு இடமில்லை. ஏனெனில் ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தில் (தமிழ்நாடு விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 2017) இவை அனைத்தும் உள்ளடக்கியவையே.

மேலும் ரேக்ளா பந்தயமும், ஜல்லிக்கட்டும் வேறு வேறு ஆகும், இரண்டையும் ஒப்பிட முடியாது. எனவே மகாராஷ்டிராவில் ரேக்ளா பந்தயம் நடத்த வேண்டுமெனில் உரிய சட்ட விதிகளை பின் பற்றி அவர்கள் சிறப்பு சட்டம் இயற்றலாம்" என பதிலளிதிருந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா ரேக்ளா பந்தய அனுமதியை மறுத்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அம்மாநிலத்தின் மேல்முறையீட்டு மனு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு உள்ளது சிறப்பு சட்டத்தை சுட்டிக்காட்டி ரேக்ளா பந்தயத்துக்கும் சிறப்பு சட்டம் இயற்றுவது தொடர்பாக மகாராஷ்டிரா மேல்முறையீடு செய்துள்ளது

ஆனால், கர்நாடகத்திலும், தமிழகத்திலும் இயற்றப்பட்ட சிறப்பு சட்டங்களுக்குள்ளாக விவாதத்துக்கு போக தற்போது வேண்டியதில்லை, அதற்கான அவசியமும் இல்லை.

முதலில் ரேக்ளா பந்தயத்துக்கு தடை விதித்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மகாராஷ்டிரா மனுவை மட்டுமே விசாரிக்க இருக்கிறோம்.

அதேவேளையில், மகாராஷ்டிரா ரேக்ளா பந்தைய விவகாரத்தில் தற்போது நாங்கள் எந்த இடைக்கால உத்தரவும் இன்று பிறப்பிக்க போவது கிடையாது என தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மகாராஷ்டிரா அரசு, பீட்டா அமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தாங்கள் வைக்க போகும் வாதத்தின் குறிப்பை தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், ரேக்ளா மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணையை வரும் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+