Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுஷ்மா ஒரு அசாதாரணமான தலைவர்.. மிகச் சிறந்த பேச்சாளர்.. மரணம் வேதனை தருகிறது.. ராகுல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Sushma Swaraj - முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

    டெல்லி: சுஷ்மா சுவராஜ் ஒரு அசாதாரணமான தலைவர். மிகச் சிறந்த பேச்சாளர். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

    சுஷ்மா சுவராஜின் திடீர் மரணம் கட்சிகளைக் கடந்து அனைத்து இந்தியாவையும் அதிரவைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் சுஷ்மாவின் மரணம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

    Rahul Gandhi, Amit Shah condole the death of Sushma Swaraj

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், சுஷ்மா சுவராஜின் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஒரு அசாதாரணமான தலைவர். மிகச் சிறந்த பேச்சாளர். அருமையான நாடாளுமன்ற வாதி. கட்சி பாகுபாடில்லாமல் அனைவருடனும் நட்பு பாராட்டியவர்.

    அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று இரங்கல் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

    என்ன ஒரு கம்பீரம்.. மறக்க முடியாத சுஷ்மா!

    அமித் ஷா இரங்கல்

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள செய்தியில், முன்னாள் வெளியுறவு அமைச்சரும், பாஜக தலைவருமான சுஷ்மா சுவராஜின் மரணம் மனதுக்கு பெரும் வேதனையைத் தந்துள்ளது. இந்திய அரசியலில் தனி முத்திரையைப் பதித்து விட்டு அவர் சென்றுள்ளார். மிகச் சிறந்த பேச்சாளர், கொள்கைப் பிடிப்பாளர், மக்களுக்காக சிறந்த சேவையாற்றியவர், நல்ல அமைச்சர் என பல முத்திரைகள் அவருக்கு உண்டு என்று கூறியுள்ளார் அமித் ஷா.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+