Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூன் 4ல் ஆட்சி மாற்றம்! ஆக்.15ல் 30 லட்சம் அரசு வேலையை நிரப்பும் பணி தொடக்கம்! ராகுல் காந்தி உறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் காலியாக உள்ள 30 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், மே 7ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறது.

Rahul Gandhi assured that the work of filling 30 lakh government jobs will be started from August 15

அசாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் என 12 மாநிலங்களில் 94 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து 4ம் கட்ட தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், வரும் ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியிலிருந்து காலியாக உள்ள 30 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். அதாவது,

"இந்தியாவின் இளைஞர்களே, ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் காலியாக உள்ள அரசுப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு தொடங்கும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். நரேந்திர மோடியின் தவறான பொய் பிரசாரத்தால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம். வேலை வாய்ப்பை தேர்ந்தெடுங்கள் வெறுப்பை அல்ல" என்று தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வேலையின்மை குறித்து மத்திய அரசு மீது காங்கிரஸ் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. லோக்சபா தேர்தல் தொடங்குவதற்கு முன்னர் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.

லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாஜக vs காங்கிரஸ் கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன. ராகுல் காந்தி அம்பானி, அதானியிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் மீது விமர்சனம் வைக்காமல் தவிர்த்து விடுகிறார் என்று மோடி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், அம்பானி, அதானி குறித்து ராகுல் காந்தி விமர்சித்து பேசிய வீடியோவை தேதி வாரியாக வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+