‛தாய் பாசம்’.. சோனியாவுக்காக ‛செஃப்’ ஆன ராகுல்.. ஆரஞ்ச் ஜாம் வைத்து பாஜகவை கலாய்த்த வீடியோ.. ஆஹா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்திக்கு பிடித்த ஆரஞ்ச் ஜாம் செய்தார். அதோடு கிச்சனில் ஜாம் தயாராகியபோது ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் பாஜக குறித்து பேசினர். இந்நிலையில் தான் ஆரஞ்ச் ஜாம் தயாரிப்பு மற்றும் பாஜக குறித்து இருவரும் வேடிக்கையாக தெரிவித்த கருத்து தொடர்பான வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

2023 ஆம் ஆண்டின் கடைசி நாளில், ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தி உடன் இணைந்து மர்மலேட் ஜாம் தயாரிக்கும் வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளார்.

Rahul Gandhi changes to chef and make mother Sonias favourite orange jam while both teased BJP

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்தி மீது அதிக பாசம் வைத்துள்ளார். இந்நிலையில் தான் சமீபகாலமாக தாயுடன் சேர்ந்து பெண் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு உணவளித்த வீடியோ உள்பட பல்வேறு வீடியோ, போட்டோக்களை ராகுல் காந்தி வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தான் 2023ம் ஆண்டில் கடைசி நாளான இன்று ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்தியுடன் இணைந்து அவருக்காக ஆரஞ்ச் மர்மலேட் (ஆரஞ்ச் ஜாம்) செய்த வீடியோவை யூடிப்பில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த சுவாரசியமான உரையாடல் மற்றும் ராகுல் காந்தியின் சமையல் திறனும் நன்கு தெரிகிறது.

கோபமான ராகுல்.. இப்படி இருந்தால் பாஜகவை எப்படி வீழ்த்த முடியும்? கட்சி தலைகளை திட்டியதால் பரபரப்பு

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் முதலில் தோட்டத்துக்கு சென்று ஆரஞ்ச் பழங்களை சேகரித்து வருகின்றனர். அதன்பிறகு அதனை சமைலறைக்கு எடுத்து வந்து தண்ணீரில் கழுவி கட் செய்து சாறு எடுத்து கியாஸ் அடுப்பில் வைத்து ராகுல் காந்தி ஜாம் தயாரிக்கிறார். இதற்கு சோனியா காந்தி உதவுகிறார்.

இந்த வேளையில் இருவருக்கும் இடையே உரையாடல் நடக்கிறது. அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் உரையாடி உள்ளனர். ராகுல் காந்தி பேசுகையில், ‛‛ஆரஞ்ச் மர்மலேட் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த ஜாம். இதற்காக பிரியங்கா (சகோதரி) பிரத்யேகமான செய்முறையை கண்டுபிடித்தார். அந்த செய்முறையை தான் பின்பற்றி செய்கிறேன்’’ என்றார்.

ஆறுதலுக்கு பின் சண்டை.. மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் கட்டிப்புரண்டு "மோதிய" ராகுல் காந்தி

மேலும் அவர் ‛‛பாஜகவினருக்கு ஜாம் வேண்டும் என்றால் தாராளமாக பெற்று கொள்ளலாம். என்ன சொல்றீங்க மம்மி’’ என கூற அதைக்கேட்டவும் சோனியா காந்தி, ‛‛அதனை நம் மீதே தூக்கி வீசுவார்கள்’’ என்ற நிலையில் பதிலுக்கு ராகுல் காந்தி, ‛‛அதுவும் நல்லது தான். நாம் அதனை எடுத்து வைத்து கொள்ளலாம்’’ எனக்கூற இருவரும் சிரித்தனர். மேலும் சோனியா காந்தி, ‛‛ராகுல் காந்தியிடம் எனக்கு பிடிக்காத விஷயம் என்றால் அது பிடிவாதம். அவரது பிடிவாதம் என்னை எரிச்சலூட்டும் வகையில் இருக்கும். அதேபோல் ராகுலிடம் எனக்கு பிடித்தது என்னவென்றால் என் மீது அதிக பாசத்துடன் இருப்பார்’’ என்றார்.

Rahul Gandhi changes to chef and make mother Sonias favourite orange jam while both teased BJP

இதையடுத்து ராகுல் காந்தி, ‛‛எங்கள் வீட்டில் சிறப்பாக சமைப்பது யார் என்றால் என் அம்மா தான். காஷ்மீர் உறவினர்களிடம் இருந்து பல சமையல் வககைளை அவர் கற்று கொண்டார்’’ என பெருமைப்பட கூறினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+