ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு இடையே.. சத்தமே இன்றி.. சைலண்ட் சம்பவம் செய்த ராகுல் காந்தி.. அடடா!
டெல்லி: மேகாலயாவின் ரி போயில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது மேற்கொண்டு வருகிறார். மேகாலயாவின் அவர் மேற்கொள்ளும் பயணம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
அசாமில் யாத்திரை மேற்கொண்ட ராகுலுக்கு அம்மாநில முதல்வர் மூலம் கடுமையான இடையூறுகள் கொடுக்கப்பட்டன. அசாமில் நாகோனில் உள்ள ஒரு கோவிலை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படாததால் அவர் பயண திட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதனால், அசாமின் மோரிகான் பகுதியில் இருந்து மேகாலயாவிற்குள் நுழைந்த ராகுல் காந்தி தற்போது மேகாலயாவின் ரி போயில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை
ராகுல் காந்தி பேச்சு: நேற்று மேகாலயாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி , "மேகாலயா இங்கிருந்து ஆட்சி செய்யப்படவில்லை, டெல்லியில் இருந்து ஆளப்படுகிறது. இதை ஏற்க முடியாது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை நாடு எதிர்கொள்கிறது.
மேகாலயா அரசு நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தது என்று உள்துறை அமைச்சர் கூறினார். இதற்குப் பிறகு, அவர் அதே அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்தார். அதன்பின் பாஜகதான் இங்கே ஆட்சியை கட்டுப்படுத்துகிறது.
நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகி, இனக்கலவரத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த மணிப்பூர் மோதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. இந்த பிரச்னையை தீர்ப்பதில் பா.ஜ.க, தீவிர அக்கறை காட்டவில்லை, என்று ராகுலோ காந்தி குறிப்பிட்டு உள்ளார்.

சத்தமின்றி சம்பவம்: இன்று மேகாலயாவின் ரி போயில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். அங்கே எதிர்பாராத அளவிற்கு அதிக அளவில் கூட்டம் ஏற்பட்டு உள்ளது. மேகாலயாவின் அவர் மேற்கொள்ளும் பயணம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
நேற்று மாலை நடந்த கூட்டத்தில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர். சத்தமே இன்றி வடகிழக்கு மாநிலங்களில் ராகுல் காந்தி யாத்திரைக்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்து உள்ளது.
பல ஆயிரம் பேர் போனில் லைட்டை ஆன் செய்து கூட்டத்தில் காட்டிய வீடியோக்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ராகுல் செல்லும் இடங்களில் பிரம்மாண்ட வரவேற்பு அவருக்கு கொடுக்கப்பட்டது.
ராமர் கோவில்: நேற்று வடமாநிலங்களில் பெரிய அளவில் ராமர் கோவில் திறப்பு விழா கவனம் பெற்ற நிலையில்தான் இங்கே ராகுல் காந்தி சத்தமின்றி சம்பவம் செய்துள்ளார்.
The public response for Rahul Gandhi in Meghalaya would have made headlines if media was neutral
— Amock (@Politics_2022_) January 22, 2024
Unshakable leader 🔥pic.twitter.com/Bh3E8u2f6z
நேற்று அயோத்தி ராமர் கோவில் பூஜை விமர்சையாக நடைபெற்றது. கோவில் கும்பாபிஷேகம் பிரதமர் மோடி , உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் முன்னிலையில் நடைபெற்றது. இவர்கள் முன்னிலையில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.
இன்று கோவில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டு உள்ளது. ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications