40,000 பேர் மத்தியில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. வழிவிட்ட காங்கிரஸார்! ராகுல் யாத்திரையில் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள 'பாரத் ஜடோ யாத்திரை' இன்று டெல்லியில் நுழைந்துள்ள நிலையில், இதில் சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த யாத்திரை பயணித்த பாதை வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று போக இருந்த நிலையில் இதற்கு அத்தனை பேரும் ஒதுங்கி வழிவிட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு எதிராகவும், எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தவும் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி இந்த யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த பயணத்தின் மூலம் சுமார் 150 நாட்களில் 3,750 கி.மீ தொலைவை கடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் என பயணித்து ராஜஸ்தான் மாநிலத்தில் 100வது நாளை யாத்திரை எட்டியது. இந்த பயணத்தில் ராகுல்காந்தி ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட கி.மீ தொலைவு வரை நடக்கிறார். அதேபோல வழிநெடுகிலும் சாமானிய மக்களை சந்தித்து அவர்களது பிரச்னைகளை கேட்டு வருகிறார்.

ஆதரவு

ஆதரவு

இந்த பயணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் உ.பி மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பல மாநில தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். தமிழ்நாட்டை பொறுத்த அளவில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதுமட்டுமின்றி ரகுராம் ராஜன் போன்ற பொருளாதார அறிஞர்கள், அசாருதீன் போன்ற விளையாட்டு வீரர்கள் திரைப்பட நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கனிமொழி

கனிமொழி

இதனிடையே நேற்று ஹரியானா மாநிலத்தின் சோனா அருகே கெர்லி லாலா பகுதியில் ராகுல்காந்தி யாத்திரை மேற்கொண்டிருந்தபோது திமுக மகளிரணி தலைவியும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி ராகுல்காந்தியுடன் இந்த யாத்திரையில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து அவருடன் சிறிது தூரம் நடந்தார். இந்நிலையில் 108வது நாளான இன்று யாத்திரை டெல்லிக்குள் நுழைந்துள்ளது. இதில் ராகுல் காந்தியுடன் சுமார் 40 ஆயிரம் பேரை வரை பங்கேற்றுள்ளனர். இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்கிறார். இவருடன் தமிழ்நாட்டிலிருந்து 500 பேர் பயணித்து இந்த யாத்திரையில் இணைகிறார்கள்.

 டெல்லி

டெல்லி

டெல்லியில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவு மக்கள் கூட்டம் யாத்திரையில் பங்கேற்றிருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டதாக காங்கிரசார் குற்றம்சாட்டியுள்ளனர். அதாவது இந்த பயணத்தின்போது வழக்கமாக காவல்துறையினர் ராகுல்காந்திக்கு இருபுறமும் கயிறு கட்டி பொதுமக்கள் உள்ளே வராத வண்ணம் பாதுகாப்பளிப்பார்கள். ஆனால் இன்று டெல்லியில் காவல்துறையினர் இதனை சரிவர செய்யவில்லை என்று கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே கட்சியின் தொண்டர்களே ராகுல்காந்தியை சுற்றி ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கினர்.

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

கூட்டம் அலைமோத யாத்திரை சலசலப்புடனேயே சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எங்கிருந்தோ வந்த ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்திற்கு நடுவில் சிக்கிக்கொண்டது. இந்த கூட்டத்தைக் கடந்துதான் அது அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இதற்கு போலீசாரின் ஒத்துழைப்பு அவசியம். ஆனால் காவல்துறையினர் போதுமான அளவில் இல்லாத நிலையில் யாத்திரையில் பயணித்தவர்களே ஆம்புலன்ஸ் போவதற்கான வழியை உருவாக்கினார்கள். ராகுல் காந்தியையும் மாபெரும் கூட்டத்தையும் கடந்து ஆம்புலன்ஸ் ஒருவழியாக மருத்துவமனைக்கு சென்று சேர்ந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்கள் தற்போது வேகமாக பரவி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+