மெகா பிளானை கையில் எடுத்த ராகுல் காந்தி.. கதர்களை நிமிர வைத்த அந்த லெட்டர்.. அதிர்ந்து நிற்கும் பாஜக
டெல்லி: பாரத் ஜடோ யாத்திரை இம்மாதம் இறுதியுடன் முடிவடைய உள்ள நிலையில், நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி உரையாட தொடங்கியுள்ளார். இவர் எழுதியுள்ள கடிதத்தில் மத்திய அரசின் கீழ் நாட்டு மக்கள் கடுமையான நெருக்கடியை எதிர் வரும் காலங்களில் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார். மேலும் வரும் 26ம் தேதி முதல் 60 நாட்களுக்கு மற்றொரு பிரசாரத்தையும் காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது.
பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்தும் எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை பலப்படுத்தவும் 'பாரத் ஜடோ யாத்திரையை' ராகுல் காந்தி தொடங்கினார். கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய இந்த யாத்திரையானது கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா என 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ கடந்து காஷ்மீரில் முடிவடைகிறது. தற்போது பஞ்சாபின் லுதியான பகுதியில் யாத்திரை இருக்கிறது.
இந்த யாத்திரையில் அரசியல் தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், திரை பிரபலங்கள் என பலர் பங்கேற்றிருந்தனர். இந்த யாத்திரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் தனது 100வது நாளை நிறைவு செய்துள்ளது. மேலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களை கடந்து வந்திருக்கிறது. இது காந்தியின் நினைவு தினமான ஜனவரி 31ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகிறது.

கடிதம்
இந்நிலையில் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், "நாட்டில் இளைஞர் வேலையின்றி தவித்து வருகிறார்கள், விலைவாசி மறுபுறம் அதிகரித்து வருகிறது, நாட்டின் செல்வங்களை கார்ப்ரேட்கள் முழுமையாக கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோல வேலையில் இருப்போர் தொடர்ந்து வருமானம் இழப்பை சந்தித்து வருகின்றனர். இது ஒரு தெளிவான பொருளாதார நெருக்கடி. இந்த நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஆழ்ந்த நம்பிக்கையற்ற உணர்வில் சிக்கிக்கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

தேர்தல்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஓராண்டு இருக்கும் நிலையில், பாரத் ஜடோ யாத்திரையானது ஜனவரி 31ம் தேதியுடன் முடிவடைந்துவிடுகிறது. எனவே கட்சிக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க காங்கிரஸ் அடுத்த கட்ட பிரசாரத்தை தொடர திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 26 முதல் மார்ச் 26 வரை டெல்லியை மையப்படுத்தி நாடு முழுவதும் பிரசார இயக்கத்தை மேற்கொள்கிறது. இந்த இயக்கத்திற்கு 'ஹாத் சே ஹாத் ஜோடோ' என பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள வெறுப்பு பிரசாரங்களை முடிவுக்கு கொண்டுவருவதுதான் இதன் நோக்கம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

6 லட்சம் கிராமங்கள்
பிரசார இயக்கத்தில் ராகுல் காந்தி எழுதிய கடிதம் ராகுல் நாடு முழுவதும் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 6 லட்சம் கிராமங்கள் மற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் வீடு வீடாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து கொடுக்கப்படும். இந்த கடிதத்தில், "நமது பன்முகத்தன்மையை முன்னிறுத்தி தோளோடு தோள் சேர்த்து உழைத்தால்தால்தான் நம் தேசத்தின் இலக்கை நாம் அடைய முடியும். இதனை நாட்டு மக்களாகிய நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள். இந்தியா வெறுப்புணர்வை நிராகரிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சாதி, மதம், மொழி, பாலினம் போன்ற வேறுபாடுகள் சமூகத்தில் விரிசல்களை ஏற்படுத்துகிறது எனவே இவற்றை கடந்து நாம் உயர வேண்டும். உங்கள் மனத்திலிருந்து பயத்தை அகற்றுங்கள்! உங்களுக்குள் வெறுப்பு மறைந்துவிடும்" என்று கூறியுள்ளார்.

மாநில மொழிகளில்
இது மட்டுமல்லாது கடந்த 2015ம் ஆண்டிலிருந்து பாஜக செய்த தவறுகள், செய்யத் தவறிய நன்மைகள், வெறுப்பு பிரசாரம் ஆகியவை குறித்து விரிவாக விவரிக்கப்பட்டிருக்கும் என்று என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இக்கடிதம் அனைத்து மாநிலங்களிலும் அம்மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.

தொண்டர்கள் மகிழ்ச்சி
இந்த யாத்திரைகளின்போது ராகுல்காந்தி பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் பாஜக தரப்பு கவனிக்காமல் இல்லை. குறிப்பாக, யாத்திரையின் 100 வதுநாளில் முக்கிய மெசேஜ் ஒன்றை பாஜக தரப்புக்கு ராகுல் மறைமுகமாக உணர்த்தியிருந்தார்.. "என் வார்த்தைகளை குறித்து வைத்து கொள்ளுங்கள், பாஜகவை காங்கிரஸ் கட்சி வீழ்த்தும், இந்த யாத்திரையை தொடங்குவதற்கு முன்பு, நாடு முழுவதும் உள்ள பகைமை மற்றும் வெறுப்பு பற்றி அச்சமடைந்தன. ஆனால் பாத யாத்திரையின் நூறாவது நாளில், தேசத்தில் மகத்தான மரியாதை, சகோதரத்துவம் மற்றும் அன்பு இருப்பதாக நான் நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், யாத்திரை முடிவு பெற்றுள்ளதுடன், "வெறுப்புணர்வை வேரறுக்க" ராகுல் மேற்கொள்ள போகும் அடுத்தக்கட்ட நகர்வு, தேசிய அளவில் கவனத்தையும் பெற்று வருகிறது.. பாஜகவையும் கலங்கடித்து வருகிறது..!!












Click it and Unblock the Notifications