'ஹலோ டாக்டர்'.. ராகுலின் புதிய முயற்சி.. மருத்துவர்கள் சப்போர்ட் கிடைக்குமா?
டெல்லி: கொரோனா பரவலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி 'ஹலோ டாக்டர்' ஹெல்ப்லைன் நம்பரை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சத்துக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. மே மாதத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக நோய்த்தொற்று இருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில், சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மே மாதம் பாதிப்பு உக்கிரமாக இருக்கும் என்றும் எச்சரிக்கின்றனர். இதனால், சொந்த ஊர்களுக்கு சென்ற பலரும், அடுத்த ஒரு மாதத்திற்கு மீண்டும் சென்னை வரும் எண்ணத்தையே கைவிடும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி, 'ஹலோ டாக்டர்' ஹெல்ப்லைன் நம்பரை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டரில், "இந்தியா ஒற்றுமையாக நின்று நம் மக்களுக்கு உதவ வேண்டும்.
'ஹலோ டாக்டர்' எனும் மருத்துவ ஆலோசனை ஹெல்ப்லைனைத் தொடங்கியுள்ளோம். இதுகுறித்த மருத்துவ ஆலோசனைக்கு +919983836838 என்ற எண்ணை அழைக்கவும். அன்புள்ள டாக்டர் மற்றும் மனநல நிபுணர்களே, எங்களுக்கு உங்கள் உதவி தேவை. பதிவுசெய்க" என்று ட்வீட் செய்துள்ளார்.
இதன் மூலம், 'ஹலோ டாக்டர்' எனும் இயக்கத்தில் இணைய மருத்துவர்களுக்கு ராகுல் காந்தி நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய தேதியில், உலகில் மற்ற எந்த நாடுகளையும் விட, கொரோனாவால் அதிகம் நசுக்கப்பட்டு வரும் நாடு இந்தியா தான். இன்று (மே.1) காலை 8 மணி வரை இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,91,64,969. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 32,68,710. ஒட்டுமொத்த மரணங்களின் எண்ணிக்கை 2,11,853.












Click it and Unblock the Notifications