ரோட்டில் இறங்கிய ராகுல்! கூடவே சப்போர்ட்டிற்கு "இந்தியா" கூட்டணி.. நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முழுமையாக ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே இரண்டாவது நாளான இன்று SIR பணிகளுக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு முழுக்க இப்போது SIR எனப்படும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. முதலில் பீகார் தேர்தலுக்கு முன்பு இந்தப் பணிகள் நடத்தப்பட்டது. இதற்கிடையே இப்போது நாடு முழுக்க தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இந்த சார் பணிகள் நடந்து வருகிறது.

இருப்பினும், இது மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதாகச் சொல்லி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இப்போது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று இதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே இரண்டாவது நாளான இன்று SIR பணிகளுக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். திமுக, இடதுசாரிகள் என அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்
SIR குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இருப்பினும், மத்திய அரசு சார் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாராக இருப்பது போலத் தெரியவில்லை. இதனால் அவை நடவடிக்கைகள் இன்றும் கூட முடங்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications