15 நாள் மோடி ஆட்சியில் மக்களை அலறவிட்ட 10 சம்பவங்கள்- கேப்பே விடாமல் விளாசும் ராகுல் காந்தி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பொறுப்பேற்ற கடந்த 15 நாட்களில் நாட்டு மக்களை 10 முக்கிய சம்பவங்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பட்டியல் போட்டு விமர்சித்துள்ளார். மேலும் இந்தியாவின் வலுவான எதிர்க்கட்சியாக "இந்தியா கூட்டணி' நெருக்கடி தொடரும், மக்களின் குரலை எழுப்பும், இவற்றுக்கு எல்லாம் பொறுப்பேற்காமல் பிரதமர் மோடியை தப்பிக்க விடாது எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. லோக்சபாவில் புதிய எம்பிக்கள் இன்று பதவியேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி முதலில் எம்பியாக பதவியேற்றார். அப்போது எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்ந்திருந்த ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைகளில் அரசியல் சாசனப் புத்தகத்தை உயர்த்திப் பிடித்து முழக்கமிட சபையில் அமளி ஏற்பட்டது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை இடம் மாற்றப்பட்டத்தைக் கண்டித்தும் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் அரசியல் சாசனப் புத்தகத்துடன் போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்து அரசியல் சாசனப் புத்தகத்தை கைகளில் ஏந்தியபடி நாடாளுமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி எம்பிக்கள் சென்றனர்.

rahul gandhi narendra modi

இதனையடுத்து தமது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் 15 நாட்கள்!

1. பயங்கரமான ரயில் விபத்து
2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள்
3. ரயில்களில் அவல நிலையில் பயணம்
4. நீட் ஊழல்
5. நீட் முதுநிலைத் தேர்வு ரத்து
6. UGC - NET வினாத்தாள் கசிவு
7. பால், பருப்பு வகைகள், எரிவாயு, சுங்கக் கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வு
8. தீயில் எரியும் காடுகள்
9. தண்ணீர் நெருக்கடி
10. வெப்ப அலையின் போது முறையான ஏற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் இறப்புகள்

Narendra Modi Rahul Gandhi Congress INDIA bloc

உளவியல் ரீதியாக நரேந்திர மோடி பின்னடைவில் இருக்கிறார், மேலும் தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கிறார். நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க முடியாது - எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இந்தியாவின் வலுவான எதிர்க்கட்சியாக நெருக்கடியைத் தருவோம். மக்களின் குரலை எழுப்புவோம். இதற்கு எல்லாம் பொறுப்புக் கூறாமல் பிரதமர் மோடியை தப்பிக்க விடக் கூடாது என பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+