இனி ராகுல் காந்தி எம்பி அல்ல.. மாஜி எம்பி! தகுதி நீக்க அறிவிப்பில் இருப்பது என்ன? பிறப்பித்தது யார்?
டெல்லி: மோடி பெயர் சர்ச்சை தொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தகுதி நீக்க அறிவிப்பில் ராகுல் காந்தி எம்பி அல்ல அவர் எக்ஸ் எம்பி என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை பிறப்பித்தவர் யார்? என்ற விபரமும் வெளியாகி உள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில் பேசினார். அப்போது‛மோடி' என்ற பெயரை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி செயல்படுவதாக பாஜகவினர் குற்றம்சாட்டிய நிலையில் அவர் மீது நடவடிக்கை கோரினர். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2 ஆண்டு சிறை தண்டனை
இந்நிலையில் தான் குஜராத் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி எனக்கூறிய நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

தகுதி நீக்கம்
மேலும் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்தது. இந்த வழக்கில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் 2 ஆண்டு சிறை தண்டனையின் அடிப்படையில் ராகுல் காந்தி இன்று எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அறிவிப்பு வெளியிட்டது யார்?
இந்த அறிவிப்பை நாடாளுமன்ற லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் நாடாளுமன்ற லோக்சபா (செயலாளர்-பொது) உத்வால் குமார் சிங் மற்றும் இணை செயலாளர் திரிபாதி ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதில் திரிபாதியின் கையெழுத்து தான் தகுதி நீக்க உத்தரவில் இடம்பெற்றுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கேரளா மாநிலம் வயநாடு தொகுதி லோக்சபா உறுப்பினரான ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கி உள்ளது. இந்த தண்டனை அடிப்படையில் லோக்சபாவில் இருந்து 2023 மார்ச் 23ம் தேதி முதல் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். இந்த தகுதி நீக்க நடவடிக்கை என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் பிரிவு 8ன் படி 102(1)(e) ஆர்ட்டிக்கிள் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் எம்பி என குறிப்பிட்டு..
மேலும் இந்த உத்தரவு நகல் ராகுல் காந்தி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் ராஜ்யசபா செயலாளர், இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து அமைச்சகம் மற்றும் துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் ராகுல் காந்திக்கு அனுப்பிய விபரம் குறிப்பிடப்ப்டடுள்ளது. அதில் ராகுல் காந்தி எக்ஸ் எம்பி என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications