சீன ஆக்கிரமிப்பு.. ஆதாரங்களை எங்கிருந்து எடுத்தார் ராகுல் காந்தி? வெளியான முக்கிய தகவல்கள்!
டெல்லி: இந்திய நிலப்பரப்பில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்று ராகுல் காந்தி பேசிய விஷயம், நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியிருக்கிறது. அவரது கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும், தன்னுடைய கருத்துக்களுக்கு ஆதாரம் இருப்பதாக கூறி, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதிய புத்தகத்தை ராகுல் காந்தி மேற்கோள் காட்டியிருக்கிறார். இந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் மேலும் பல சலசலப்புகளை உருவாக்கியிருக்கின்றன.
மத்திய அரசின் பட்ஜெட் திட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தின்போது, மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

தகவலுக்கான ஆதாரம்
தன்னுடைய கருத்துக்கு அவர் ஆதாரமாக, 'நான்கு நட்சத்திரங்களின் விதி' (Four Stars of Destiny) எனும் புத்தகத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார். இந்த புத்தகத்தை எழுதியவர் முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022 ஏப்ரல் வரை இந்திய ராணுவத் தளபதியாகப் பணியாற்றியிருந்தார் நரவனே. இவர் பொறுப்பில் இருந்த போதுதான், சீனா- இந்தியா இடையே மோதல் நடந்தது. இந்த விவகாரம் தொடர்பாகவும், அக்னிவீர் திட்டம் தொடர்பாகவும் தனது புத்தகத்தில் நரவனே குறிப்பிட்டிருக்கிறார்.
வெளிவராத புத்தகம்
இந்த புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. வழக்கமாக ராணுவ உயர் அதிகாரிகள் எழுதும் புத்தகங்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பின்னரே வெளியாகும். ஓய்வுபெற்ற அதிகாரிகள், தகவல்களை வெளியிடுவதற்கான விதிமுறைகளை மீறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நிபந்தனை. எனவே நரவனே எழுதிய புத்தகமும் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
ராகுல் காந்தியின் மேற்கோள்
ஆனால், புத்தகத்தின் சில பக்கங்கள் எப்படியோ லீக் ஆகிவிட்டன. அதிலிருந்த தகவல்களைத்தான் தற்போது ராகுல் காந்தி மேற்கோளிட்டு பேசியிருக்கிறார். ராகுல் காந்தி பேசியது ஒருபுறம் எனில், புத்தகத்தில் உள்ள மற்ற தகவல்கள் மேலும் விவாதங்களை தூண்டும் விதமாக இருக்கின்றன.
அக்னிபாத் திட்டம்
அதாவது அக்னிபாத் ஆட்சேர்ப்பு திட்டம் குறித்து, அரசின் அணுகுமுறையும், ராணுவத்தின் பார்வையும் என்ன என்பது இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட வீரர்களில் 75% பேரை, 4 ஆண்டுகள் முடிந்ததும் ராணுவத்தில் நிரந்தரமாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது, நரவனேவின் யோசனை. ஆனால், அரசு வெறும் 25% பேரை மட்டுமே இணைத்துக்கொள்ள ஒப்புதல் கொடுத்தது.
அக்னி வீரர்களுக்கு சம்பளம்
அதேபோல அக்னிபாத் திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் ராணுவ வீரர்களுக்கு ரூ.20,000 என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும்.. ஆனால், உயிரை பணயம் வைத்து செய்யப்படும் வேலைக்கு இந்த அளவுக்கு குறைந்த சம்பளம் போதாது என்றும் சொல்லப்பட்டதால், சம்பளம் ரூ.30,000 ஆக நிர்ணயிக்கப்பட்டதாகவும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அரசியல் தலைமையின் முயற்சி
இந்த திட்டம் கொண்டுவரப்பட்டபோது, அரசு தரப்பில் சொல்லப்பட்ட விஷயம் இதுதான். "ராணுவத்தில் சராசரி வயதை குறைக்கும் நோக்கத்துடன், ராணுவமே இந்த திட்டத்தை முன்மொழிந்தள்ளது" என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், இந்த திட்டம் ராணுவத்திடம் இருந்து வந்த யோசனை அல்ல. மாறாக, அரசியல் தலைமையால் மேலிருந்து கீழ் திணிக்கப்பட்ட முயற்சி என நரவனே தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications