ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்க அனுமதி மறுப்பு.. பாஜக மீது பாய்ந்த காங்.. பரபர குற்றச்சாட்டு
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் விமானம் வாரணாசி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் விமானம் வாரணாசி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ராகுல் காந்தியை கண்டு பாஜக அரசு அச்சப்படுவதே இதற்கு காரணம் என்றும் காங்கிரஸ் சரமாரியாக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி நேற்று கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து இருந்தார்.
தனது கேரள பயணத்தை நிறைவு செய்து கன்னூரில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட ராகுல் காந்தி நேற்று இரவு வாரணாசிக்கு வருகை தர திட்டமிட்டு இருந்தார். இன்று காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரக்யராஜ் நகரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் ராகுல் காந்தியின் பயண திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது.

தரையிறங்க அனுமதி மறுப்பு
அந்த வகையில், ராகுல் காந்தியின் தனி விமானம் நேற்று இரவு 10.45 மணியளவில் வாரணாசி விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி கொடுக்க மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக ராகுல் காந்தியின் வாரணாசி பயணம் ரத்து செய்யப்பட்டது. கன்னூரில் இருந்து வந்த ராகுல் காந்தியின் விமானம் டெல்லிக்கு திரும்பியது.

அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக
இந்த நிலையில், ராகுல் காந்தியின் விமானத்தை வேண்டும் என்றே வாரணாசி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கவில்லை என்றும் ராகுல் காந்தியின் மீதான அச்சம் காரணமாக பாஜக அழுத்தம் கொடுத்து இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் ராய் கூறுகையில், "ராகுல் காந்தி வாரணாசிக்கு வந்து விட்டு இங்கிருந்து பிரக்யாராஜ் போவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக விமான நிலைய அதிகாரிகள் ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்து விட்டுவிட்டனர்.

பிரதமர் கலக்கம் அடைந்துள்ளார்
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவின் வருகையை சாக்காக சொல்கிறார்கள். அதிக அளவிலான விமானம் வருகை தருவதால் தரையிறங்க அனுமதி இல்லை என சொல்கிறார்கள். ராகுல் காந்தியை கண்டு பாஜக அச்சப்படுகிறது. அதன் காரணமாகவே ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்க அனுமதி கொடுக்கப்படவில்லை. ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரையை கண்டு பிரதமர் கலக்கம் அடைந்துள்ளார். எனவே தற்போது ராகுல் காந்திக்கு தொல்லை கொடுக்கிறார்கள்" என்றார்.

கால பைரவர் கோவிலில் பிரார்த்தனை
முன்னதாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நேற்று மாலை வாராணசிக்கு வருகை தந்திருந்தார். வாரணாசியில் உள்ள கோட்வால் பாபா கால பைரவர் கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் குடியரசுத்தலைவர் சென்றார். குடியரசுத்தலைவராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக காசிக்கு வந்த திரவுபதி முர்மு கங்கா ஆரத்தியிலும் கலந்துகொண்டார். குடியரசுத்தலைவர் வருகை காரணமாக விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications