அந்த 3-ஆவது கேள்வி... இது அதைவிட பயங்கரம்.. ராகுலின் பலே பலே டுவீட்
Recommended Video

டெல்லி: ரபேல் விவகாரம் குறித்து நரேந்திர மோடி நேற்று லோக்சபைக்கு வராததால் அவருக்கு முன் கூட்டியே கேள்விகளை ராகுல் காந்தி அனுப்பியுள்ளார். மொத்தம் 4 கேள்விகளில் 3-ஆவது கேள்வி மட்டும் விடுபட்டது ஏன் என்பது குறித்தும் அவராகவே விளக்கியுள்ளார்.
லோக்சபாவில் அதிமுகவினரின் கடும் அமளிகளுக்கு நடுவே ரபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அதிமுக எம்பிக்கள், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் பிரதமர் நரேந்திர மோடி வரை தனது விமர்சனங்களாலும் கேள்விகளாலும் ராகுல் காந்தி திணறடித்துவிட்டார்.
ரபேல் ஒப்பந்தம் குறித்த விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டபோது லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி இல்லை. ரபேல் விவகாரம் குறித்து பதிலளிக்க முடியாததால் மோடி அவரது அறையில் ஒளிந்து கொண்டிருக்கிறார் என ராகுல் விமர்சனம் செய்தார்.

பதில்கள்
தனது டுவிட்டர் பக்கத்திலும் மோடியை கிண்டல் செய்வதை ராகுல் விடவில்லை. மோடிக்கு 4 கேள்விகளை முன்கூட்டியே அனுப்பியுள்ள ராகுல், இதற்கு பதில்களை மோடி தர வேண்டும் என கூறியுள்ளார்.
|
கேள்விகள்
டுவிட்டரில் ராகுல் காந்தி தனது பதிவில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றத்தில் நாளை (இன்று) மோடி ரபேல் ஒப்பந்தம் குறித்து தேர்வை சந்திக்கவுள்ளார். அந்த தேர்வுக்கான கேள்விகளையும் முன் கூட்டியே அனுப்புகிறேன். இவைதான் கேள்விகள்:

126, 36 ஆனது ஏன்?
கேள்வி 1: இந்திய விமான படைக்கு 126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்கள் மட்டுமே தேவைப்பட்டது ஏன்?
கேள்வி 2: ஒரு விமானத்தின் விலை 560 கோடி என முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு பேசி வைத்திருந்த நிலையில் ரூ 1600 கோடிக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது ஏன்?

அனில் அம்பானி
கேள்வி 4: இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம் விமானங்களை தயார் செய்யும் ஒப்பந்தத்தை அளிக்காமல் அனில் அம்பானியிடம் அனுப்பியது ஏன்?
மோடிஜி நேரடியாக நாடாளுமன்றத்துக்கு வந்து பதிலளிக்கிறாரா இல்லை அவரது பிரதிநிதி மூலம் பதில் கொடுக்கிறாரா என்பதை பார்ப்போம் என்று ராகுல் கூறியுள்ளார்.
|
சர்ச்சை
இதைத் தொடர்ந்து அடுத்த டுவீட்டையும் அவர் அனுப்பியுள்ளார். அதில் விடுபட்ட கேள்வி 3-ஐ அனுப்பியுள்ளார். அந்த டுவீட்டில் 3-ஆவது கேள்வியை நாடாளுமன்றத்தில் பேசக் கூடாது என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துவிட்டார். ரபேலை விட கேள்வி 3 மிகவும் சர்ச்சைக்குரியதாகிவிட்டது.

இதுதான்
கேள்வி 3: மோடி அவர்களே ரபேல் ஒப்பந்தங்கள் தொடர்பான கோப்புகளை பாரிக்கர் ஏன் அவரது படுக்கை அறையில் வைத்துள்ளார். அந்த கோப்புகளில் உள்ள ரகசியம் என்ன? என்பதை எங்களுக்கு கூறுங்கள் என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications