எஸ்ஐஆர் குறித்து லோக்சபாவில் விவாதம்.. ராகுல் சொன்ன வார்த்தையால் கொதித்த பாஜக எம்பிக்கள்! கடும் அமளி
டெல்லி: எஸ்.ஐ.ஆர் குறித்து லோக்சபாவில் விவாதம் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, எஸ்.ஐ.ஆர் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், RSS அனைத்து அமைப்புகளையும் கைப்பற்றிவிட்டதாக சாடினார். ராகுல் காந்தி சொன்ன வார்த்தையால் பாஜக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று SIR எனப்படும் நாடாளுமன்ற சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்த விவாதம் நடைபெற்றது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த விவாதத்தை தொடங்கி வைத்தார். லோக்சபாவில் 10 மணி நேரம் இந்த விவாதம் நடைபெறும் என்றும், இதற்கான பதிலை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் நாளை அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIR குறித்த விவாதத்தை தொடங்கி வைத்த ராகுல் காந்தி, அந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பேசினார். மேலும், RSS அனைத்து அமைப்புகளையும் கைப்பற்றிவிட்டதாக சாடினார்.
ராகுல் காந்தி கூறுகையில், "காந்தியை கொலை செய்த பிறகு RSS அனைத்து அமைப்புகளையும் கைப்பற்றிவிட்டது. பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களையும் RSS கைப்பற்றிவிட்டது. CBI, அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளையும் RSS கைப்பற்றிவிட்டது" என்றார்.
ராகுல் காந்தி இவ்வாறு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, "இவையெல்லாம் தர்மசங்கடமான உண்மைகள்" என்றார்.
ராகுல் காந்தி SIR குறித்த விவாதத்தை திசைத் திருப்புவதாக மத்திய அமைச்சர் கிரிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டினார். தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பேசுமாறு ராகுல் காந்திக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார். அதன்பிறகு பேசிய ராகுல் காந்தி, என்னை இந்த அவையில் பேசுவதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications