காங். தலைவர்-ராகுல் திட்டவட்ட மறுப்பு- மன்மோகன்சிங் அல்லது ஏ.கே. அந்தோணியை இடைக்கால தலைவராக்க யோசனை
டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை தற்போதைக்கு ஏற்கப் போவதில்லை என ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அதேநேரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அல்லது ஏ.கே. அந்தோணியை இடைக்கால தலைவராக்கலாம் என்கிற யோசனையையும் ராகுல் காந்தி முன்வைத்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக முடிவு செய்துள்ளார். காங்கிரஸை மறுசீரமைக்க கோரி 23 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியதன் தொடர்ச்சியாக இந்த முடிவை சோனியா எடுத்திருக்கிறார் என கூறப்படுகிறது.

இதனால்தான் சோனியா காந்தி, இடைக்கால பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவே தகவல்கள் பரவின. ஆனால் காங்கிரஸ் தரப்பு இதனை நிராகரித்துவிட்டது. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி தமது முடிவை தெரிவிக்க உள்ளார்.
இதனை காங்கிரஸ் செயற்குழு ஏற்குமா? நிராகரிக்குமா? என்பது இன்று தெரியும். இதனிடையே சோனியா காந்தி பதவியில் தொடர விரும்பவில்லை எனில் ராகுல் காந்திதான் தலைவராக வேண்டும் என்கிற குரல்கள் வலுத்து வருகின்றன. ஆனால் ராகுல் காந்தியோ, இப்போதைக்கு தாம் தலைவர் பதவியை ஏற்கப் போவதில்லை என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
அத்துடன் புதிய இடைக்கால தலைவராக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அல்லது ஏ.கே. அந்தோணியை நியமிக்கலாம் என்கிற யோசனையையும் ராகுல் காந்தி முன்வைத்திருக்கிறார். டெல்லியில் நடைபெறும் இன்றைய காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் (செயற்குழு) இதுதான் நடக்குமா? என்பது தெரிந்துவிடும்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications