தாக்குதல் நிறுத்தத்தை முதலில் ட்ரம்ப் அறிவித்தது ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!
டெல்லி: போர் நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் வெளியிட்டது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் குறித்து சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில், கடந்த மே 7ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவ படைகள் தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து மே 8 மற்றும் 9ஆம் தேதிகளில் இந்தியா - பாகிஸ்தானுக்கிடையே கடும் தாக்குதல் நடைபெற்றது. பாகிஸ்தான் ராணுவம் டிரோன்களைக் கொண்டும், ஏவுகணைகளை கொண்டும் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்தியா முறியடித்தது.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரத்தில் தலையிட்டதாக கூறப்பட்டது. நேற்று மாலை இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் நேற்று மாலை 5 மணி முதல் அமலுக்கு வந்தது. இருந்தாலும் நேற்று இரவிலும் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தது. இதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராஜாங்க உறவுகள் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள ராகுல் காந்தி, "பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் உடனான தாக்குதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது குறித்து விவாதிக்க வேண்டும். இந்த கோரிக்கையை நிச்சயம் பரிசீலிப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications