ஒரு இஞ்ச் நிலம் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என மோடி பச்சை பொய் சொல்கிறார்.. ராகுல் சீற்றம்!
டெல்லி: நமது நாட்டின் ஒரு இஞ்ச் நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவே இல்லை என பிரதமர் மோடி தொடர்ந்து பொய் கூறி வருகிறார் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடுமையாக சாடியுள்ளார்.
இந்தியாவின் லடாக், பூட்டானின் டோக்லா, வடகிழக்கில் அருணாச்சல பிரதேசம் பகுதிகளில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை சீனா படுகொலை செய்ததால் இரு நாடுகளிடையே யுத்த சூழ்நிலையும் உருவானது. ஆனால் இருதரப்பும் பேச்சுவார்த்தைகளை 3 ஆண்டுகளாக தொடர்ந்த் நடத்தி வருகிறது.

இப்பின்னணியில், சீனா அதிகாரப்பூர்வமான வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 1962-ம் ஆண்டு இந்திய நிலத்தை ஆக்கிரமித்து அக்ஷாய் சின் என பெயரிட்ட பகுதி, வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் ஆகியவை தம்முடைய நிலம் என சீனா குறிப்பிட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனா, தெற்கு திபெத் என பெயரிட்டிருக்கிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என தொடர்ந்து கூறி வருகிறேன். ஆனால் பிரதமர் மோடியோ, ஒரு இஞ்ச் நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவே இல்லை என தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். அண்மையில் லடாக் நான் சென்றிருந்தேன். அப்பகுதி மக்களும் கூட சீனா ஊடுருவியிருப்பதை சுட்டிக்காட்டினர். தற்போது சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டிருக்கிறது. அதில் அருணாசலப் பிரதேசத்தை தம்முடையதாக சுட்டிக்காட்டி இருக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி பகிரங்கமாக பேச வேண்டும் என்றார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications