இந்தியா - சீனா மோதல் பற்றிய விவாதம்.. நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்திலிருந்து ராகுல் வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எல்லையில் மீண்டும் நடந்துள்ளதாக வெளியான தகவல் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் அது ஏற்கப்படாததால் ராகுல் காந்தி உட்பட அனைத்து காங்கிரஸ் எம்பிகளும் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Recommended Video

    China Foreign Minister Wang Yi - ஐ சந்தித்த Jaishankar.. ஒரு மணி நேரம் நடந்த முக்கியமான மீட்டிங்

    பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாகிஸ்தான் உடனான பிரச்சினை, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனாவுடனான மோதல், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆதிக்கம், இலங்கையில் வலுப்பெறும் சீனா ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    Rahul Gandhi walks out of House panel meet on defense as chair denies discussion on LAC

    இருப்பினும், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இவை இல்லை என்பதால் இது குறித்து விவாதிக்க முடியாது என பாஜக எம்பியும் நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவருமான ஜூவல் ஓரம் மறுத்துவிட்டார்.

    இதை நிகழ்ச்சி நிரலில் சேர்ந்து, இவை பற்றி விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் இந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

    ஜூவல் ஓரம் பேசுகையில், "ராகுல் காந்தி உட்பட எந்தவொரு காங்கிரஸ் எம்பியும் இந்த ஆண்டிற்கான திட்டத்தைப் பற்றி முடிவெடுக்கும்போது கூடிய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் எம்பிகள் அப்போது இது குறித்துப் பேசியிருக்கலாம்.

    யாராக இருந்தாலும் ஒரு விஷயம் குறித்து விவாதிக்க விரும்பினால், அது குறித்து அவர்கள் 14 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அளிக்க வேண்டும்" என்றும் அவர் கூறியதாகத் தெரிகிறது.

    இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியும் மற்ற காங்கிரஸ் எம்.பி.க்களும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+