திங்கள்கிழமையே ராகுல் காந்தி நாடாளுமன்றம் செல்வார்.. ஆனால் இப்படி ஒரு பெரும் கேள்வி இருக்கு?
டெல்லி: ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றே இது குறித்து மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி கருத்து தெரிவித்துள்ளார். கடிதம் உடனடியாக ஏற்கப்பட்டால் வரும் திங்கட்கிழமையே ராகுல் நாடாளுமன்றம் செல்வார்.
மோடி என்ற பெயருக்கு எதிராக அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்பி பதவியில் இருந்து தானாகவே தகுதி நீக்கம் ஆகிவிடுவார்கள். தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். தண்டனையை நிறுத்தி வைத்தால் அல்லது ரத்து செய்தால் மட்டுமே அவர் எம்பியாக தொடர முடியும். அந்த வகையில் ராகுல் காந்தி மக்களவை செயலகத்தால் இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் குஜராத் உயர்நீதிமன்றம் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததால் ராகுல் காந்தியால் எம்பியாக கடந்த சில மாதங்களாக தொடரமுடியவில்லை. இந்நிலையில் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவில் இன்று முக்கியமான உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இதன்படி, ராகுல் காந்தி தனது மனுவில், குறிப்பிட்ட நபர்களில் ஒருவர் கூட அவருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை.13 கோடி பேர் உள்ள இச்சமூகத்தில் வழக்கு தொடுத்தவர்யார் என்று பார்த்தால், பாஜகவில் இருப்பவர் தான் என்று கூறியிருந்தார். ஒரு அவதூறு வழக்கிற்காக நான் எட்டு ஆண்டுகள் வரை எனது குரலை கொடுக்காமல் இருக்க வேண்டுமா என ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.
எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அத்தனை வழக்குகளும் பாஜகவினரால் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவற்றின் எதிலும் நான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். மோடி குறித்து பேசியதாக புகார் கொடுத்தவர் நேரடியாக எனது பேச்சை கேட்கவில்லை. மாறாக "வாட்ஸ் அப்" செயலியில் யாரோ அனுப்பிய தகவலை அடிப்படையாகக் கொண்டு புகார் கொடுத்து இருக்கிறார் என்றும் ராகுல் காந்தி தரப்பில் இன்று வாதிடப்பட்டது.
இதையடுத்து வாதங்களுக்கு பிறகு பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையின் காரணமாக ஒரு தனி நபரின் உரிமை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது ஒரு தொகுதி பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்ற அளவிற்கு இந்த வழக்கு பொருத்தமான காரணமா? என கேள்வி எழுப்பினர்.
இரண்டு ஆண்டு தண்டனை என்பதற்கு பதிலாக ஒரு ஆண்டு பதினோரு மாதம் என தண்டனை வழங்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க மாட்டார் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட2 வருட தண்டனையை நிறுத்தி வைத்தால் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி செல்வது உறுதியாகி உள்ளது.
ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றே இது குறித்து மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதப்படும்: காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி கருத்து தெரிவித்துள்ளார். கடிதம் உடனடியாக ஏற்கப்பட்டால் வரும் திங்கட்கிழமையே ராகுல் நாடாளுமன்றம் செல்வார் என்று தெரிகிறது.

ராகுல்காந்தி 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற உடனேயே அவரை மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து மக்களவைச் செயலகம் தகுதி நீக்கம் செய்திருந்து. தற்போதைய நிலையில், தகுதி நீக்கத்தை திரும்ப பெரும் உத்தரவை எவ்வளவு நாட்களுக்குள் எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ராகுல் காந்தி தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்ப பெற்றால், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது அவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications