நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து லோக்சபாவில் விவாதிக்கனும்.. மோடிக்கு கடிதம் அனுப்பிய ராகுல் காந்தி!
டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக லோக்சபாவில் நாளை விவாதம் நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ஒருநாள் விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் ராகுல் காந்தி.
18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதங்கள் நடைபெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி பதிலுரையாற்றினார்.

முன்னதாக லோக்சபா, ராஜ்யசபாவில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் முடிவடைந்த பின்னரே எந்த ஒரு விவாதமும் நடத்த முடியும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதமும் பிரதமர் மோடியின் பதிலுரையும் முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பி உள்ளார். அதில், நீட் தேர்வு முற்ரைகேடுகள் தொடர்பாக நாளை லோக்சபாவில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக புதிய எம்பிக்கள் பதவியேற்றது முதலே லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது; நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என திமுக எம்பிக்களும் முழக்கம் எழுப்பினர். நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து இந்தியா கூட்டணி எம்பிக்களும் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் நீட் தேர்வை கைவிட வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி இருந்தனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications