வாக்கு திருட்டு: புஸ் வானமாய் போன.. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு! பூத் ஏஜென்ட்கள்தான் பிரச்சனையே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் அழகியின் போட்டோ என, வாக்கு திருட்டு குறித்து மிக சீரியஸான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி அடுக்கியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பெரியதாக பேசவே இல்லை. பெரிய அளவில் கண்டன போராட்டங்கள் நடக்கவில்லை. ராகுல் விமர்சனங்கள் ஏன் வலுவடையாமல் போனது?

வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட தொகுதியில்தான் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக ராகுல் காந்தி சாடியிருந்தார். ஆனால், இந்த முறை முன்வைத்திருக்கும் விமர்சனங்கள் கொஞ்சம் ஷார்ப்பானவை. ஒரு மாநிலத்தையே (ஹரியானா) வாக்கு திருட்டு மூலம் பாஜக கைப்பற்றி இருக்கிறது என்பதுதான் அது.

Rahul Gandhi Haryana

அப்படியெனில் ஹரியானா, கேரளா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தீவிரமான போராட்டங்களில் இறங்கியிருக்க வேண்டும். இந்த விஷயத்தை மக்கள் பிரச்சனையாக மாற்றியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இது குறித்து பேசியிருக்க வேண்டும். ஆனால், அப்படி ஏதும் பெரியதாக நடக்கவில்லை.

எஸ்கேப் ஆன தேர்தல் ஆணையம்

மறுபுறம் இந்த விமர்சனங்கள் குறித்து தேர்தல் ஆணையம் சிம்பிளாக ரிப்ளை கொடுத்து எஸ்கேப் ஆகிவிட்டது. "வாக்காளர் பட்டியலில் பிரச்சனைகள், போலியான வாக்களிப்பு அல்லது போலி வாக்காளர்கள் போன்றவற்றை காங்கிரஸின் பூத் ஏஜென்டுகள் கண்டறிந்திருந்தால், தேர்தலின்போதே அவர்கள் ஏன் முறையாக ஆட்சேபனை தெரிவிக்கவில்லை அல்லது புகார் அளிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கேள்வி நியாயமானதுதான். காங்கிரஸ் கட்சியில் பூத் ஏஜென்டுகளே இல்லையா? இருக்கிறார்கள் எனில் அவர்கள் என்ன வேலை பார்த்தார்கள்? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.

பூத் ஏஜென்டுகள் என்பவர்கள் யார்? அவர்களின் பணி என்ன? காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்டுகள் சரியாக வேலை பார்த்திருந்தால் தேர்தலின்போதே இதை தடுத்திருக்க முடியுமா? ஆம் இதை காங்கிரஸ் முன்னரே செய்திருக்க முடியும்.

பூத் ஏஜென்டுகள் என்பவர்கள் யார்?

ஒவ்வொரு தொகுதியிலும் பல பூத்கள் அமைக்கப்படும். அந்த தொகுதியின் வேட்பாளர் ஒவ்வொரு பூத்களுக்கும் சென்று வாக்குப்பதிவை சரி பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே அவருக்கு உதவியாகவே பூத் ஏஜெண்டுகள் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் நாளன்று பூத் ஏஜெண்டுகள் ஏற்கனவே அவர்களிடம் கொடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் பட்டியலை எடுத்துக்கொண்டு பூத்துக்கு செல்வார்கள். தேர்தல் நாள் முழுவதும் அங்கேயே அவர்கள் இருப்பார்கள்.

பூத் ஏஜென்டுகளின் பணி

பூத் அமைந்துள்ள பகுதியில் விக்னேஷ் (உதாரணத்திற்கு) என்கிற நபர் வாக்களிக்க வருகிறார் எனில், அவரது பெயர் குறிப்பிட்ட பாகத்தில், எத்தனையாவது நம்பரில் இருக்கிறது என்பதை உறுதி செய்து, அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை, அல்லது பூத்ஸ் ஸ்லீப் என அங்கீகரிக்கப்பட்ட 14 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருக்கிறதா? இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பூத்களில் அரசு அதிகாரி இருப்பார். அவரிடமும் இதேபோல வாக்காளர் பட்டியல் இருக்கும். அவர் வைத்திருக்கும் பட்டியலிலும் குறிப்பிட்ட வரிசை எண்ணில் விக்னேஷின் பெயர் இருக்கிறதா? என்பதை ஏஜென்ட் உறுதி செய்ய வேண்டும்.

பூத் ஏஜென்ட் ஓகே சொன்ன பிறகு அதிகாரி ஓகே சொன்ன பிறகுதான் வாக்காளர் கையில் மையை வைத்துக்கொண்டு வாக்களிக்க வாக்குச்சாவடிக்குள் நுழைய முடியும். ஒருவேளை விக்னேஷ் ஏற்கனவே வாக்களித்து சென்று விட்டார் என்று தெரிந்தால், ஏஜென்ட் உடனடியாக தேர்தல் அதிகாரியிடம் முறையிட வேண்டும். இது பிரதான பணி. இதேபோல பதிவான வாக்குகள் குறித்து வாக்குப்பதிவு முடிந்த பின்னர், அதன் விவரங்களை ஏஜென்ட்களிடம் தேர்தல் அதிகாரி வழங்குவார்.

வாக்குப்பதிவும், அதற்கு பின்னரும்

வாக்கு எண்ணிக்கை நாளன்று அதிகாரி கொடுத்த பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், மின்னணு பெட்டியில் காட்டும் வாக்குகளின் எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா என்பதையும் பூத் ஏஜென்ட் உறுதி செய்ய வேண்டும். இது தவிர வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு பெட்டிகள் வைத்திருக்கும் அறைக்கு சீல் வைப்பது, வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு பெட்டிகளை திறப்பது, சீலை உடைப்பது, உள்ளிட்ட அனைத்து பணிகளும் பூத் ஏஜென்ட்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும்.

இவ்வளவு முக்கியமான பணிகளை பூத் ஏஜென்ட்கள் மேற்கொள்ள வேண்டும். ஹரியானாவில் காங்கிரஸின் பூத் ஏஜென்ட்கள் இந்த பணியை சரியாக செய்திருந்தால் தேர்தல் நாளன்றே பிரச்சனையை கிளப்பியிருக்க முடியும். ஆனால் அதை சரியாக செய்யாமல், இப்போது வந்து புலம்புவதால் என்ன பயன்? என்றே பலரும் கேட்கின்றனர். இந்த காரணத்தால்தான் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு சப்போர்ட் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+