மத்திய கிழக்கு நாடுகளில் தத்தளிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்களை அனுப்புக: ராகுல்
டெல்லி: கொரோனா பாதிப்பால் பல்வேறு நாடுகள் லாக்டவுனை நடைமுறைப்படுத்தி இருக்கும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் தத்தளிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்களை மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
மத்திய கிழக்கு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது, இதனால் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நாடுகளில் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிநிமித்தமாக தங்கியுள்ளனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் இவர்களால் நாடு திரும்ப முடியவில்லை. இதனையடுத்து இவர்களை மீட்டு வர சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
The #Covid19 crisis & shutting of businesses in the Middle East have left thousands of Indian workers in deep distress & desperate to return home. The Govt must organise flights to bring home our brothers & sisters most in need of assistance, with quarantine plans in place.
— Rahul Gandhi (@RahulGandhi) April 15, 2020
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆழ்ந்த கவலையுடன் நம்பிக்கை இழந்து போய் உள்ளனர். இவர்களை அழைத்துவர மத்திய அரசு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்தியாவுக்கு நமது சகோதர சகோதரிகளை அழைத்து வருவதுடன் அவர்களை தனிமைப்படுத்தும் திட்டங்களையும் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications