ரயில்வேயில் 22000 காலி பணியிடங்கள் அறிவிப்பில் பெரும் குறைபாடு.. அமைச்சருக்கு ஊழியர்கள் கடிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ரயில்வேயில் குரூப்-டி மட்டத்திலான பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அந்தவகையில் 22 ஆயிரம் குரூப்-டி பணியிடங்களை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில்வேயில் 22 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்படுவதாக வெளியிட்ட அறிவிப்பில் பெரும் குறைபாடு இருப்பதாக ரயில்வே ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய ரயில்வேயில் குரூப்-டி மட்டத்திலான பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அந்தவகையில் 22 ஆயிரம் குரூப்-டி பணியிடங்களை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப உள்ளது. ரயில்வேயில் பாயின்ட்ஸ்மேன், உதவி டிராக் பராமரிப்பாளர், உதவி லோகோ ஷெட் ஊழியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட இருக்கிறது. இந்த பணியிடங்கள் ரயில் பயணிகள் பாதுகாப்பில் முக்கியமானவை ஆகும்.

railway recruitment 2026 Major deficiency in the notification of 22000 vacant posts in Railways

ரயில்வே தொழிற்சங்கங்கள் (AIRF) மற்றும் எதிர்க்கட்சிகள் அளித்துள்ள தரவுகளின்படி, இந்திய ரயில்வேயில் ஒட்டுமொத்தமாக (அனைத்து நிலைகளிலும்) சுமார் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில் பெரும் பகுதி குரூப்-டி மற்றும் குரூப்-சி பிரிவைச் சேர்ந்தவை ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை குரூப்-டி பணியாளர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை குரூப்-டி பணியாளர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த 2019 இல் அறிவிக்கப்பட்ட 1.03 லட்சம் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் பணி நியமனங்கள் 2022-23 ஆம் ஆண்டுகளில் முடிவடைந்தன. 2022 இல் 1 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் அறிவிக்கப்பட்டது. அடுத்தாக 2026- வெறும் 22,000 ஆகக் குறைந்துள்ளது தேர்வர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ரயில்வேயில் அதிகரித்து வரும் தானியங்கி தொழில்நுட்பங்கள் மற்றும் அவுட்சோர்சிங் முறைகள் முக்கியக் காரணமாகக் கூறப்படுகின்றன.

இதனிடையே நாடு முழுவதும் பல்வேறு ரயில்வே மண்டலங்களில் ஏராளமான மேற்படி பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், வெறும் 22 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுவது மொத்த எண்ணிக்கையில் மிக மிக குறைவு என அனைத்து இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் சிவகோபால் மிஸ்ரா ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறுகையில், "ரயில்வே செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு தேவைகளை உரிய முறையில் பரிசீலித்த பிறகு மண்டல மட்டத்தில் மதிப்பிடப்பட்ட உண்மையான காலியிட நிலை, ரயில்வே வாரியத்தால் வெளியிடப்பட்ட இறுதி அறிவிப்பில் முறையாகப் பிரதிபலிக்கப்படவில்லை என்பது வருந்தம் அளிக்கிறது.

ரயில்வே பணிமனைகளில் உள்ள காலியிடங்கள் தொடர்பாக சரியான மற்றும் விரிவான மதிப்பாய்வு அமைச்சகத்தால் செய்யப்படவில்லை. ரயில்வே பணிமனை காலியிடங்களை கருத்தில் கொள்ளாதது, சிதைந்த மற்றும் குறைத்து மதிப்பிடப்பட்ட காலியிட எண்ணிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே துறையின் இந்த அறிவிப்பு இது அடிப்படை யதார்த்தங்களை பிரதிபலிக்காத குறைபாடுடைய அறிவிப்பாக இருக்கிறது.

பணிமனைகள் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை ரயில்வேயின் முக்கியமான செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் மனிதவளத்தில் ஏதேனும் பற்றாக்குறை இருந்தால் அது செயல்திறன் மற்றும் பாதுகாப்பை நேரடியாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

உதவியாளர்கள் இன்றி பணிமனைகளின் சீரான இயக்கம் என்பது சாத்தியமில்லை. அதிக அளவிலான காலியிடங்களை மதிப்பிட்டும் குறைந்த எண்ணிக்கையை அறிவித்திருப்பது மண்டல ரயில்வேக்களின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் சீரான செயல்பாட்டின் பார்வையில் நியாயம் கிடையாது.

இது பணியாளர் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்து, நீண்டகால காலியிடங்கள் காரணமாக ஏற்கனவே அதிகமாகப் பணிச்சுமையில் இருக்கும் தற்போதைய பணியாளர்கள் மீது தேவையற்ற மற்றும் தவிர்க்க முடியாத சுமையை சுமத்த வாய்ப்புள்ளது. எனவே வெறும் 22 ஆயிரம் காலியிடங்கள் என்ற அறிவிப்பை ரயில்வே வாரியம் மறுபரிசீலனை செய்து, உண்மை நிலையின் அடிப்படையில் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்" இவ்வாறு அந்த கடிதத்தில் மிஸ்ரா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+