இனி RAC டிக்கெட்டிற்கு பாதி கட்டணம்? ரயில்வேக்கு போன முக்கியமான டாக்குமென்ட்! பயணிகள் குஷி
டெல்லி: ஆர்ஏசி டிக்கெட்டில் பயணிப்போருக்குப் பாதிக் கட்டணத்தைத் திரும்பத் தர நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு பரிந்துரை அளித்துள்ளது. பெர்த் கிடைக்காத போது, முழுக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது என்றும் இதனால் ஆர்ஏசி பயணிகளுக்குப் பாதிக் கட்டணத்தைத் திரும்பத் தர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுக் கணக்கு குழு தெரிவித்துள்ளது.
இப்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கிடையே ரயில்வே பயணிகள் குறித்து சில முக்கியமான பரிந்துரைகளை நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு முன்வைத்துள்ளது. அதில் குறிப்பாக RAC டிக்கெட்டுகளுக்கு முழுக் கட்டணம் வசூலிப்பதற்கு இந்தக் குழு ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

ஆர்ஏசி டிக்கெட்
அதாவது இப்போது இந்திய ரயில்வேயில் RAC என்ற டிக்கெட் முறை இருக்கிறது. RAC என்றால் Reservation Against Cancellation என அர்த்தம். கன்பார்ம் டிக்கெட் முடிந்தவுடன் வெயிட்டிங் லிஸ்ட்டிற்கு பதிலாக இந்த ஆர்ஏசி பிரிவில் சில குறிப்பிட்ட டிக்கெட்கள் வழங்கப்படும். ஆர்ஏசி டிக்கெட்கள் இருந்தால் ஒருவர் ரயிலில் பயணிக்க முடியும். இருப்பினும், அவர்களுக்கு உறுதியாக முழு பெர்த் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது.
ஆர்ஏசி டிக்கெட் இருக்கும்போது ஒரே பெர்த்தில் இருவர் செல்ல வேண்டும். கன்பார்ம் பயணிகள் யாராவது வரவில்லை என்றால் மட்டுமே ஆர்ஏசி பயணிகளுக்கு பெர்த் கிடைக்கும். இல்லையென்றால் முழு பயணத்திலும் உட்கார்ந்தே செல்ல வேண்டும். இப்படி ஒரு பெர்த்தை இருவர் ஷேர் செய்யும் நிலையில், எதற்காக இந்தியன் ரயில்வே முழுக் கட்டணத்தை வசூலிக்கிறது என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். கன்பார்ம் டிக்கெட்டிற்கு பிறகு வெயிட்டிங் லிஸ்ட்டிற்கு போகலாம் நடுவில் ஆர்ஏசி தேவையில்லை என்பதே பலரது கோரிக்கையாக இருந்தது.
இனி பாதிக் கட்டணம்?
இது தொடர்பாகத் தான் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. முழு டிக்கெட்டிற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, ஒரு பெர்த்தை இருவர் பகிர்வது நியாயமற்றது என அந்த ரிப்போர்ட் சுட்டிக்காட்டியுள்ளது. ஆர்ஏசி பயணிகளில் பெரும்பாலானோர் பெர்த் கிடைக்காமலேயே பயணிக்க வேண்டி இருப்பதாகவும் அப்படி அமர்ந்து கொண்டே பயணிப்போரிடம் முழுக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது என்று அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.
பரிந்துரை
இதனால் RAC டிக்கெட்டில் முழுப் படுக்கை வசதி கிடைக்காத பயணிகளுக்கு, பாதிக் கட்டணத்தைத் திரும்பத் தரும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகத்திற்கு இந்தக் குழு பரிந்துரை அளித்துள்ளது. இந்த நடைமுறை நியாயமற்றது எனக் குறிப்பிட்ட குழு, இது குறித்து ரயில்வே சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விளக்கமளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள்
மேலும், அதிவேக ரயில்களை வகைப்படுத்துவது குறித்தும் இக்குழு கவலை தெரிவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி, அகல ரயில் பாதையில் குறைந்தபட்சமாக 55 கி.மீ. சராசரி வேகம் மற்றும் மீட்டர் கேஜில் குறைந்தபட்சம் 45 கி.மீ. சராசரி வேகத்தில் செல்லும் எந்த ரயிலும் அதிவேக ரயிலாகக் கருதப்படுகிறது. ஆனால், அதன் பிறகு ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளைக் கருத்தில் கொண்டால், இந்த அளவுகோல் காலாவதியானது என அந்த குழு கருதுகிறது.
2007 முதல் இந்த அளவுகோலில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போதுள்ள 478 அதிவேக ரயில்களில் 123 ரயில்கள் 55 கி.மீ./மணிக்கும் குறைவான வேகத்தில் இயக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப ரயில்களைச் சரியாக வகைப்படுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications