ராமர் கோவில் கும்பாபிஷேக விழா.. ரயில் நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு.. பயணிகளுக்கு வெளியான செம அப்டேட்
டெல்லி: வரும் 22 ஆம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை ரயில் பயணிகள் அனைவரும் பார்க்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 9,000 ரயில் நிலையங்களில் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அங்கு ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கியது. மொத்தம் 3 அடுக்குகளாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. நாகரா கட்டடக்கலை நுட்பத்துடன் சிற்பங்கள் கொண்ட தூண்கள் அமைத்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவிலில் முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவைடைந்துள்ளன.

இதையடுத்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகளும் தொடங்கி உள்ளன. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்து மத தலைவர்கள், துறவிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ராமர், சீதைக்கு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகமே ராமர் கோவில் கும்பாபிஷேகத்தைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேக விழா நடைபெறும் நாளில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் அயோத்தி கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் கும்பாபிஷேக விழாவை பார்க்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள 9,000 ரயில் நிலையங்களில் உள்ள பெரிய திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications