ராஜஸ்தானில் அதிர்ச்சி: பாஜகவுக்கு ஆதரவாக அஸ்ஸாம் ஆளுநர் தேர்தல் பிரசாரம் - வெடித்த சர்ச்சை!
டெல்லி: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் அஸ்ஸாம் ஆளுநர் குலாம் சந்த் கட்டாரியா பாஜகவுக்காக தேர்தல் பிரசாரம் செய்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்த குலாம் சந்த் கட்டாரியா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
200 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு நவம்பர் 25-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் பெரும்பான்மைக்கு தேவை 101 இடங்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் ஆம் ஆத்மியும் போட்டியிடுகிறது. ராஜஸ்தான் மாநில தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகள் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்கின்றன. அதே நேரத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் போட்டியை உருவாக்கும்; மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையவும் சாத்தியம் எனவும் சில கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் அஸ்ஸாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. ராஜஸ்தானின் உதய்ப்பூரில் பாஜக வேட்பாளர் தாராசந்த் ஜெயினை ஆதரித்து குலாப் சந்த் கட்டாரியா பிரசாரம் செய்தார். ஒரு மாநில ஆளுநராக பதவி வகிப்பவர் தேர்தல் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது நடைமுறை. இதனை மீறி அஸ்ஸாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா பிரசாரம் செய்திருப்பது காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் புகார் கொடுத்துள்ளன. அதில், ஆளுநர் கட்டாரியா தேர்தல் பிரசாரம் செய்தது அப்பட்டமான அரசியல் சாசன மீறல்; சட்டவிரோதமானது; ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அஸ்ஸாம் ஆளுநர் பதவியில் இருந்து குலாப் சந்த் கட்டாரியா ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இதே கோரிக்கையை மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் வலியுறுத்தி உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications