ஆபரேஷன் சிந்தூர்: இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? எதிர்க்கட்சிகளை சாடிய ராஜ்நாத் சிங்
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எத்தனை இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? என்று மட்டுமே எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்ற எனவும், எதிரிகளின் எத்தனை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று ஒருபோதும் கேட்கவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லோக்சபாவில் இன்று காட்டமாக பேசினார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து பேசினார். அப்போது இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து விவாதம் நடத்தக்கோரி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதனையடுத்து இன்று மதியம் 12 மணிக்கு லோக்சபாவில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மதியம் 12 மணிக்கு கூடியபோது எதிர்க்கட்சி எம்பிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் மதியம் 2 மணிக்கு கூடிய போது மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கு விளக்கம் அளித்து விவாதத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர், "பாகிஸ்தான் தவறான நடவடிக்கையை எடுத்தால் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடரும்.. அணு ஆயுத தாக்குதல் மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா பயப்படாது. பாகிஸ்தானுக்கு இருந்த சந்தேகங்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலமாக தீர்க்கப்பட்டன..
இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா?
இந்தியாவின் நவீன ஏவுகணைகள் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தோம்.. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திவிட்டு அந்நாட்டின் ராணுவ உயர் ராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்தோம். பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்திய ராணுவம் முறியடித்தது. போரை நிறுத்த முதலில் பாகிஸ்தான் அதிகாரிகள் தான் நம்மை தொடர்பு கொண்டனர். இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையினை துளி அளவும் சந்தேகப்பட வேண்டாம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதால் தான் நாம் எதிர்க்கிறோம் என்று விளக்கம் அளித்தார்.
அப்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்று அடிக்கடி கேட்டு வரும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கேள்விக்கு பதில் அளித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
சிறு சிறு விஷங்களை பெரிதுப்படுத்த கூடாது
எதிர்க்கட்சியினர் இந்திய விமானங்கள் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டனவா என்று கேள்வி கேட்கிறார்கள். இந்த கேள்வி ஆரோக்கியமானது கிடையாது. ஆனால் எதிரிகள் விமானங்கள் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்று ஒரு முறை கூட அவர்கள் கேள்வி கேட்கவில்லை. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டுவிட்டதா என்று தான் அவர்கள் கேள்வி கேட்டிருக்க வேண்டும். ஒரு இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது சிறு சிறு விஷங்களை பெரிதுப்படுத்த கூடாது.
நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது
இதுபோன்ற சிறு சிறு விஷங்கள் எல்லாம் முக்கியமானது கிடையாது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை. இந்தியா தனது இலக்கினை 100 சதவீதம் அடைந்தது. இதனால் தான் தாக்குதலை நிறுத்தியது. எந்த அழுத்தத்தினாலும் மோதலை நிறுத்தவில்லை. 1962 ஆம் ஆண்டு நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட, நம் நாட்டின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனரா?, இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனரா? என்று தான் கேட்டோம்.. எத்தனை இயந்திரங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications