கட்சி தாவிய 7 ஆம் ஆத்மி எம்பிக்கள்.. பாஜகவில் இணைத்துக்கொள்ள அனுமதி! சி.பி.ராதாகிருஷ்ணன் சிக்னல்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய ராகவ் சதா, சந்தீப் பதக், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 7 மாநிலங்களவை உறுப்பினர்கள், பாஜகவில் இணைந்திருந்தனர். இந்நிலையில், மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இந்த இணைப்பிற்கு அனுமதி அளித்துள்ளார்.
இதன் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 106-லிருந்து 113-ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலங்களவையில் ஆத்மி கட்சிக்கு வெறும் 3 உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

ராகவ் சதா, சந்தீப் பதக், ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால், அசோக் மிட்டல், விக்ரம்ஜித் சிங் சாக்னி என மொத்தம் 7 எம்பிக்கள் கழன்று சென்றிருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சி தனது கொள்கைகள் மற்றும் விழுமியங்களிலிருந்து விலகிவிட்டதால், தாங்கள் ஒரு குழுவாக பாஜகவில் இணைந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்த இணைப்புக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், மறுபுறம் 7 எம்பிக்களையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி ராதாகிருஷ்ணனுக்கு ஆம் ஆத்மி தலைமை கடிதம் எழுத இருக்கிறது. மாநிலங்களவை அல்லது மக்களவையில் எந்தவிதமான பிரிவும் அல்லது குழுவாக இணைவதும் சட்டப்படி செல்லாது என்றும், இது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் ஆம் ஆத்மி கூறி வருகிறது.












Click it and Unblock the Notifications