விவசாயிகளின் புதிய ஹீரோவான ராகேஷ் திகைத்... காசிப்பூர் போராட்டக்களத்தில் பளபளக்கும் போஸ்டர்கள்!
டெல்லி: பாரதிய கிசான் யூனியனின் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் திகைத்தை பெருமைப்படுத்தும் வகையில் காசிப்பூர் எல்லை போராட்ட பகுதிகளில் அவரின் பிரமாண்ட போஸ்டர்களும், அவரை சிறப்பு படுத்தும் சுவரொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.
காசிப்பூர் எல்லையில் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது ராகேஷ் திகைத் கதறி அழுதது அவர் பல்வேறு விவசாயிகளின் மனதில் இடம் பிடிக்க காரணமாகியது.
இதன்மூலம் ராகேஷ் திகைத் விவசாயிகளின் புதிய ஹீரோவாக உருவாகி விட்டார். அவரை கொண்டாடி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் இதில் எதிலும் எந்த முடிவும் கிடைக்கவில்லை.

திசை மாறிய பேரணி
இதற்கிடையே டெல்லியில் குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி திசை மாறியது. சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லியே பரபரப்பானது.

ராகேஷ் திகைத் ஆவேசம்
இந்த சம்பவத்துக்கு பிறகு விவசாயிகள் சோர்ந்து இருந்தனர். ஆனால் பாரதிய கிசான் யூனியனின் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் திகைத் சோர்ந்து கிடந்த விவசாயிகளுக்கு உற்சாகம் ஊட்டினார். டெல்லி-உத்தப்பிரதேச எல்லைக்கு அருகில் உள்ள காசிப்பூர் பகுதியில் விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார். போலீசார் கலைந்து செல்லுமாறு எச்சரித்தபோது, ''தற்கொலை செய்து கொள்வேன், உண்ணாவிரதம் இருப்பேன்'' ''வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை ஓய மாட்டேன்'' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

புதிய ஹீரோ ராகேஷ் திகைத்
மேலும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட மகாபஞ்சாயத்து என்ற மாபெரும் கூட்டத்தை கூட்டியதும் ராகேஷ் திகைத் ஆவார். காசிப்பூர் எல்லையில் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது அவர் கதறி அழுதது, ராகேஷ் திகைத் பல்வேறு விவசாயிகளின் மனதில் இடம் பிடிக்க காரணமாகியது. இதன்மூலம் ராகேஷ் திகைத் விவசாயிகளின் புதிய ஹீரோவாக உருவாகி விட்டார். காசிப்பூர் எல்லை போராட்ட பகுதிகளிலும், போராட்ட மேடை அருகிலும் ராகேஷ் திகைத்தின் பிரமாண்ட போஸ்டர்களும், அவரை சிறப்பு படுத்தும்சுவரொட்டிகளும், போஸ்டர்களும் வைக்கப்பட்டுள்ளன.

56 இஞ்ச் மார்பு சுவரொட்டி
ஒரு போஸ்டரில் விவசாயி தனது மார்பைக் கிழித்து டிக்கிட் படத்தைக் காண்பிப்பதைபோல் இடம்பெற்றுள்ளது. விவசாயிகளின் கூடாரங்களுக்கு அருகில் உள்ள ஒரு சுவரொட்டியில் " திகைத் மீது ஒரு புல்லட் சுடப்பட்டால், ஆதரவாளர்கள் முதலில் அவர்களை எதிர்கொள்வார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. திகைத்தை கைது செய்ய ஏதேனும் வாகனம் வந்தால், விவசாயிகள் முதலில் தங்கள் தலையை சக்கரங்களுக்கு அடியில் வைப்பார்கள்" என்று மற்றொரு சுவரொட்டியில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் ராகேஷ் திகைத்தை பெருமைப்படுத்தும் விதமாக பல்வேறு சுவரொட்டிகள், போஸ்டர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications