"ராமர் பெயரிலும் ஊழல்.. ப்ளீஸ்.. உடனே தலையிடுங்க".. மோடியிடம் பஞ்சாயத்துக்கு போன சாதுக்கள்!
பிரதமர் மோடிக்கு சாதுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
டெல்லி: "ராமர் பெயரில் சிலர் ஊழல் செய்கிறார்கள்.. அதனால், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு விளக்கம் அளிக்க வேண்டும்" என்று சாதுக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு நடந்தது அயோத்தி வழக்கு.. இறுதியில் அதன் மீதான மேல்முறையீட்டு வழக்கில் கடந்த நவம்பரில் சுப்ரீம் கோர்ட், இந்துக்கள் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு தந்தது.. ராமர் கோயிலும் அங்கு கட்ட அனுமதி தரப்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசு ராமர் கோயில் கட்டுவதற்காக "ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா" என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது.. ஆனால், திடீரென ஊழல் புகார் எழுந்தது..!

கோயில்
கோயிலுக்காக பக்தர்கள் நன்கொடையில் விலைக்கு வாங்கப்படும் நிலங்கள் மீது அடுத்தடுத்த ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. கடந்த மார்ச் 18-ல் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்ட ஒரு நிலம், அடுத்த கொஞ்ச நேரத்திலேயே ரூ.18.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியதாக ஒரு புகார் எழுந்தது.. பிறகு, அயோத்தியில் ஒரு மடம் ரூ.30 லட்சத்திற்கு விற்கப்பட்டு, ரூ.2.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியதாக இன்னொரு புகார் எழுந்தது.

அறக்கட்டளை
இதற்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் விளக்கங்கள் தரப்பட்டன.. ஆனால், அந்த விளக்கங்கள் எதுவும் சரியில்லை, ஏற்க முடியவில்லை என்று அயோத்தியின் சாதுக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இது தொடர்பாக சுமார் 150 சாதுக்கள் ஒன்றுகூடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஒரு மீட்டிங்கையும் நேற்று நடத்தினர்.

விளக்கம்
இந்த கூட்டத்தில், ராமர் கோயிலுக்கான நில பேர ஊழல் புகாரில் பிரதமர் மோடி தலையிட்டு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இதை பற்றி சாதுக்கள் சொல்லும்போது, "பல்வேறு தனிப்பட்ட நபர்களால் வாங்கப்பட்ட நிலங்கள், உடனடியாக அறக்கட்டளைக்கு பல கோடி அதிக லாபத்தில் விற்கப்பட்டுள்ளது...

பாஜக
இதில் பலனடைந்தவர்கள் பெரும்பாலும், பாஜகவுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.. ராமர் பெயரில் இப்படி சிலர் ஊழலுக்கு மேல் ஊழல் செய்துள்ளனர்.. அதனால்தான், நில பேர ஊழலில் பிரதமர் மோடி தலையிட்டு விளக்கம் அளிப்பது அவசியம் என்று நாங்கள் நினைக்கிறோம்.. வழக்கம்போல இந்த பிரசச்னையிலும் பிரதமர் மௌனம் வாக்க வாய்ப்பு உள்ளது.. எனினும் இதுபோன்ற புகார்களை விசாரிக்கு ஒரு குழு அமைக்க வேண்டும்" என்கிறார்கள்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications