காங். ஆட்சியில் ஊழல்.. 2014-ல் பொருளாதாரம் மோசமாக இருந்தது.. லோக்சபாவில் வெள்ளை அறிக்கை தாக்கல்
டெல்லி: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மன்மோகன் சிங் அரசு பொருளதார முடிவுகளை எடுக்க முடியாமல் திணறியது. ஊழல் அதிகமாக இருந்து என்பது உள்ளிட்ட குற்றாச்சாட்டுக்கள் மத்திய அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
மத்திய அரசின் கடந்த 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டில் தென் இந்திய மாநிலங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இடைக்கால பட்ஜெட்டில் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என போராட்டங்கள் வெடித்துள்ளன. கர்நாடகா அரசு நேற்று டெல்லியில் போராட்டம் நடத்தியது. தமிழ்நாட்டுக்கு நீதி கோரி இன்று டெல்லியில் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் லோக்சபாவில் நேற்று பேசிய பாஜகவின் நிதி விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் தலைவர் ஜயந்த் சின்ஹா, "2014-ம் ஆண்டுக்கு முந்தைய கால இந்தியாவின் பொருளாதார நிலைமையையும் தற்போதைய பொருளாதார நிலைமையையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மோசமான பொருளாதார நிலைமையை விவரிக்கும் வகையில் அந்த வெள்ளை அறிக்கை இருக்கும். நாட்டின் பொருளாதாரம் 5% மாக இருந்தது தற்போது 10% ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலைமையை எப்படி மத்திய அரசு எதிர்கொண்டது என்கிற விவரங்கள் வெள்ளை அறிக்கையில் இருக்கும்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட பொருளாதார முடிவுகள், நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. வெள்ளை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- 2014-ல் மோடி அரசு பதவியேற்ற போது பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது.
வராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் பலவீனமாக இருந்தன. டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு தூறைகள் மிகவும் மோசமாக இருந்தது. இந்திய பொருளாதாரம் பெரும் சிக்கலில் இருந்தது. மோசமான சூழலில் இந்திய பொருளாதாரம் அப்போது இருந்தது. தொடர்ந்து 5 வருடங்களாக இரட்டை இலக்க பணவீக்கம். முதலீடுகள் மிகவும் குறைந்து இருந்தன.
அரசின் பற்றாக்குறை அதிகமாக இருந்தது. இத்தகைய பிரச்சினைகளில் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்.பிறகு இவற்றை எல்லாம் படிப்படியாக சரி செய்து இருக்கிறோம். மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 2 ஜி ஊழல் நடைபெற்றது. நிலக்கரி சுரங்க ஊழல், காமன்வெல்த் போட்டி நடத்தியதில் ஊழல் ஆகியவையும் இந்த வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications