டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் நிறுவனர் அஜித்சிங் கொரோனாவால் காலமானார்

ராஷ்ட்ரிய லோக் தள கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங் காலமானார். அவருக்கு வயது 84.

Google Oneindia Tamil News

டெல்லி: ராஷ்ட்ரிய லோக் தள கட்சியின் நிறுவனர் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங் உடல்நலக்குறைவால் காலமானார் அவரது 84. கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அஜித் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த அஜித் சிங் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகன் ஆவார். இவர் கடந்த 1987 மற்றும் 1988 காலகட்டத்தில் லோக் தல் (ஏ) மற்றும் ஜனதா கட்சியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

Rashtriya Lok Dal chief and former Union minister Ajit Singh dies of Covid-19

பரம்பரையாக அரசியல் குடும்பத்தை சேர்ந்த இவர் ஃபாக்பட் தொகுதியில் இருந்து ஆறு முறை லோக்சபா உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ள இவர், 1989 ஆம் ஆண்டு முதல்முறையாக மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் சரண் சிங்கின் மகனான காரக்பூர் ஐஐடி மற்றும் இல்லினாய்ஸ், சிகாகோ தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படித்தவர். 15 ஆண்டுகாலம் கணினித்துறையில் அமெரிக்காவில் இருந்த அஜித் சிங் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் தன் அரசியல் வாழ்க்கைக்காக இந்தியா திரும்பினார்.

1986ம் ஆண்டு முதல் முறையாக ராஜ்ய சபாவுக்காக தேர்வு செய்யப்பட்டார். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ஜாட் சமூகத்தினர் மத்தியில் அஜித் சிங்குக்கு பெரிய செல்வாக்கு இருந்தது.

அஜித் சிங் ஃபாக்பத் தொகுதியிலிருந்து 7 முறை லோக்சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டவர். வி.பி.சிங் பிரதமராக இருந்த போது அஜித் சிங் தொழிற்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது உணவு அமைச்சராக இருந்தார் பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து 1996ம் ஆண்டு விலகினார்.

அதன் பிறகு ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியை ஆரம்பித்து கடந்த 2001ஆம் ஆண்டில் வாஜ்பாயி பிரதமராக இருந்த போது வேளாண் அமைச்சராக பதவி பெற்றார். மே 2003 வரை தேசியஜனநாயகக் கூட்டணியில் இருந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக மன்மோகன்சிங் அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார்.

84 வயதாகும் அஜித் சிங் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குருகிராமில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அஜித்சிங் மரணமடைந்து விட்டதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜீத் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோர் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். அஜித்சிங்கின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஷ்டிரிய லோக் தளத் தலைவர் அஜித் சிங் ஜியின் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது இரங்கல் என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

English summary
RLD chief former Union minister Ajit Singh has passed away. He had tested positive for Covid-19 on April 20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X