டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களால் ‘டாடா’..! மக்களுக்காக ’டாடா நானோ’..! இன்ஸ்டாகிராமில் உருகிய ரத்தன் டாடா! என்னங்க ஆச்சு?

Google Oneindia Tamil News

டெல்லி : சாலைகளில் சாண்ட்விச் போல இந்திய குடும்பத்தினர் இருசக்கர வாகனத்தில் நெருக்கிக் கொண்டு செல்வதை கண்டு கவலை அடைந்ததாகவும், மக்கள் பாதுகாப்பான சாலைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாகவே டாடா நானோ காரை அறிமுகம் செய்வதாக ரத்தன் டாட்டா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவின் கனவு கார் தயாரிப்பாக நானோ மாடல் உருவானது.ஒரு லட்சம் ரூபாய் விலை, ஏசி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன், ஏழைகளும் காரில் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் நானோ உருவாக்கப்பட்டது.

கோடையை இதமாக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை காத்திருக்கு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமாகோடையை இதமாக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை காத்திருக்கு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா

2008ஆம் ஆண்டில் தயாரிப்பு தொடங்கப்பட்டு மக்கள் கைகளில் தவழ தொடங்கிய டாடா நானோ காருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, படிப்படியாக அதன் தயாரிப்பு குறைக்கப்பட்டது.

ரத்தன் டாடா உருக்கம்

ரத்தன் டாடா உருக்கம்

கடந்த 2018ஆம் ஆண்டில் கடந்த ஆண்டில் 297 நானோ கார்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், முந்தைய இருப்பையும் சேர்த்து 2019ஆம் ஆண்டில் 299 கார்கள் விற்பனையாகின. அந்த ஆண்டில் ஒரு கார்கூட உற்பத்தி செய்யப்படாத நிலையில், ஒரே ஒரு கார் மட்டும் விற்பனையானதாக பங்குச் சந்தைக்கு டாடா மோட்டார்ஸ் தகவல் அளித்துள்ளது. மேலும், வருகிற பிஎஸ் 6 விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், டாடா நானோவில் அந்த தொழில்நுட்பத்திற்கான வழி இல்லாததும் நானோ கார் தயாரிப்பை கைவிடக் காரணமாக இருந்தது.

 டாடா நானோ கார்

டாடா நானோ கார்

இந்நிலையில், டாடா நானோ காரை சந்தையில் அறிமுகம் செய்ய என்ன காரணம்? என்பதை டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "இந்தியக் குடும்பங்கள் சாலையில் ஸ்கூட்டர்களில் பயணிப்பதை நான் பார்த்துள்ளேன். அந்த பயணத்தின் போது தாய் மற்றும் தந்தைக்கு மத்தியில் சாண்ட்விட்ச் போல குழந்தைகள் அடைப்பட்டு இருப்பார்கள்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அவர்களது பாதுகாப்பான பயணத்திற்காக என்ன செய்யலாம் என யோசித்த போது உதயமான ஐடியா தான் நானோ. நான் ஆர்க்கிடெக்ட் படித்ததன் பலனாக டூடுல் வரைவேன். நான் ஓய்வாக இருக்கும் போது அதை வரைவது வழக்கம். இருசக்கர வாகனங்களை பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில் இறங்கினேன். அப்படி நான் வரைந்த டூடுல் நான்கு சக்கரங்களை கொண்டிருந்தது.

இன்ஸ்டாகிராம் பதிவு

இன்ஸ்டாகிராம் பதிவு

அப்போது முடிவு செய்தேன் அந்த பாதுகாப்பான வாகனம் கார் தான் என்று. நானோ, நம் மக்கள் அனைவருக்குமான கார்" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நானோ கார் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், ரத்தன் டாட்டா வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சினிமா பிரபலங்களுக்கு இணையாக சுமார் 6 மில்லியன் ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானோ குறித்து ரத்தன் டாடா வெளியிட்டுள்ள இந்த பதிவை சுமார் 10 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

English summary
Ratan Tata posted on Instagram that he was worried about the Indian family getting stuck in a two-wheeler like a sandwich on the roads and that the introduction of the Tata Nano was due to the desire of the people to travel on a safe road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X