டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

RBI சூப்பர் அறிவிப்பு.. வங்கிகளுக்கான வட்டியில் எந்தவித மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி அதிரடி

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: ரெப்போ வட்டி விகிதம் 9 ஆவது முறையாக மாற்றம் எதுவுமின்றி, அதே 4 சதவீதமாகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன்பெறும் வணிக வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டி வட்டிதான், "ரெப்போ வட்டி" எனப்படும்.

ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், வணிக வங்கிகள் மக்களுக்காக வழங்கும் கடன்களில் வட்டித் தொகையும் குறைய வாய்ப்பு இருக்கிறது..

லஞ்சம் வாங்க மாட்டேன்...என் பேர சொல்லி கேட்டாலும் குடுக்காதீங்க-அசத்தும் மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர்..லஞ்சம் வாங்க மாட்டேன்...என் பேர சொல்லி கேட்டாலும் குடுக்காதீங்க-அசத்தும் மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர்..

மாற்றமில்லை

மாற்றமில்லை

இதற்காகவே, ரிசர்வ் வங்கி 2 மாசத்துக்கு ஒருமுறை நிதிக்கொள்கை குழுக்கூட்டத்தை நடத்துவது வழக்கம்.. ஆனால், இந்தியாவில் கொரோனா நெருக்கடி காரணமாக பல மாதங்களாகவே இந்த ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.. அதே அளவிலேயே இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்திலும் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது..

 அறிவிப்பு

அறிவிப்பு

இந்நிலையில், ரெப்போ விகிதம் மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன.. ஆனால், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமுமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் ஆர்பிஐயின் நிதி கொள்கை முடிவு தொடர்பான மாதாந்திர கூட்டம் நடந்தது.. இக்கூட்டத்தற்கு பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறும்போது, "ரிசர்வ் வங்கி அளிக்கும் வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 4% தொடரும்..

 பணவீக்கம்

பணவீக்கம்

ரெப்கோ வட்டியில் மாற்றம் இல்லை.. 2021-22 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஜிடிபி 13.7 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது... குறுகிய கால ஏற்றம் - இறக்கம் தவிர்த்து 4 சதவீத இலக்குடன் பணவீக்கமும் பரந்த அளவில் சீரமைக்கப்பட்டுள்ளது.. இதன்மூலம் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்திலேயே நீடிக்கும்.. இதன்மூலம் ஆர்பிஐ தொடர்ந்து 9ஆவது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் இருக்கிறது.

 அவசியம்

அவசியம்

இந்த ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களும் அவசியமான ஒன்றாகும்.. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் மாநில வாட் வரி குறைத்ததால் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது... நடப்பாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதத்தில் நீடிக்கும்.. நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5.3 சதவீதமாக அதே நிலையில் உள்ளது.. அதுமட்டுமல்லாமல், ஆகஸ்ட் மாதம் முதல் அரசாங்கம் தயாரிக்கும் பொருட்களை உபயோகப்படுத்துவதும் அதிகரித்தும் வருகிறது.. இது ஒட்டுமொத்த தேவைக்குமான ஆதரவாகும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
RBI says Repo rate remains uncharged at 4 percent, says Shaktikanta das
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X