வருகிறது புதிய சிறப்பம்சங்கள் கொண்ட ரூ.20 நோட்டு.. விரைவில் அறிமுகம்.. என்ன கலர் தெரியுமா?
புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
டெல்லி: புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2016ல் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பை தொடர்ந்து இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர்.

இதையடுத்து படிப்படியாக புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் ஆனது. புதிதாக 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் சில நாட்களில் 200 ரூபாய் நோட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வருடம் புதிதாக புதிய 50 ரூபாய், 100 ரூபாய், 10 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் ஆனது. இதேபோல் தற்போது புதிதாக 20 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2016 மார்ச் 31ன் கணக்குப்படி 4.92 பில்லியன் 20 ரூபாய் நோட்டுகள் இருந்தது. தற்போதைய மார்ச் 2018 கணக்குப்படி மொத்தமும் 10.21 பில்லியன் 20 ரூபாய் நோட்டுகள் உள்ளது. இந்த நிலையில்தான் புதிய 20 ரூபாய் நோட்டுகள் அடிக்கப்பட உள்ளது.
இந்த நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இது புதிய அம்சங்களுடன் இருக்கும் என்றும் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இதில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர். அதேபோல் இது பச்சை நிறத்தில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தனது கையெழுத்துடன் வெளியிட போகும் முதல் நோட்டுகள் இதுவாக இருக்க வாய்ப்புள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications