அமெரிக்கா போட்ட ஆர்டர்..படக்குனு படுத்தே விட்ட அம்பானியின் ரிலையன்ஸ்! இனி ஆயில் இறக்குமதி கிடையாதாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரஷ்யாவில் உள்ள இரண்டு பெரிய பிரபல எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்துள்ளது. ரஷ்​யா​வின் இரண்டு பெரிய எண்​ணெய் நிறு​வனங்​கள் மீது அமெரிக்கா தடை​வி​தித்​துள்​ளது. இதனால், ரிலை​யன்ஸ் இண்​டஸ்ட்​ரீஸின் கச்சா எண்​ணெய் இறக்​குமதி பாதிக்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ரஷ்யாவின் மிகப்பெரிய இந்திய வாடிக்கையாளரான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மேற்கு நாடுகளின் புதிய தடைகளை பின்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் மூன்றாவது ஆண்டாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்து வரும் தடைகள் மேலும் கடுமையாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம், ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லூகாயில் (Lukoil) மீது புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் உக்ரைனில் நடைபெறும் ரஷ்ய தாக்குதலுக்கு நிதி ஆதரவு அளித்து வருகின்றன" என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த இரு நிறுவனங்களும் இணைந்து தினசரி சுமார் 3.1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

US Reliance oil import

ரிலையன்ஸ் எண்ணெய்

இதில் ரோஸ்நெஃப்ட் நிறுவனமே உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் 6 சதவீதம் மற்றும் ரஷ்யாவின் மொத்த உற்பத்தியின் பாதி அளவினை வகிக்கிறது. 2022 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனில் தாக்குதல் நடத்தியதிலிருந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்கு நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளன. ஆனால், அதே நேரத்தில் இந்தியா மற்றும் சீனா தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடமிருந்து பெருமளவு எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன.

ரஷ்யாவுக்கு தடைகள்

இந்தியாவில், தனியார் துறையில் ரஷ்ய எண்ணெயின் மிகப்பெரிய வாங்கும் வாடிக்கையாளராக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உள்ளது. இதேபோல ரஷ்ய நிறுவனமான ரோஸ்நெஃப்ட் ஒரு பங்குதாரராக உள்ள நயாரா எனர்ஜி நிறுவனமும் ரஷ்ய எண்ணெயை இந்தியாவுக்குக் கொண்டு வருகிறது. தற்போது அமெரிக்க தடைகள் காரணமாக இந்த இரு நிறுவனங்களும் கடுமையான அழுத்தத்துக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்

இந்நிலையில், ரஷ்யாவின் மிகப்பெரிய இந்திய வாடிக்கையாளரான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மேற்கு நாடுகளின் புதிய தடைகளை பின்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடும் தடைகளை விதித்துள்ள நிலையில், இந்தியாவில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கிய நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ், "எங்கள் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தும் விதிமுறைகளுக்கு இணங்க இயங்கும் வகையில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளப் போகின்றன" என்று தெரிவித்துள்ளது.

எரிபொருள் இறக்குமதி

"இந்த விவகாரத்தில் இந்திய அரசாங்கத்திடமிருந்து எந்தவித வழிகாட்டுதலும் வந்தால், வழக்கம்போல் முழுமையாக இணங்குவோம்" என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துடன் எந்தவித வர்த்தக பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளக்கூடாது என்ற முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 21ஆம் தேதியிலிருந்து எந்தவித எரிபொருள் இறக்குமதியையும் ஏற்கமாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் நிறுவனம், குஜராத்தில் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு வளாகத்தை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு, இந்த நிறுவனம் ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துடன் தினசரி 5 லட்சம் பேரல் எண்ணெய் வாங்கும் 10 ஆண்டுக் கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனுடன், இடைத்தரகர்களின் மூலம் கூட ரஷ்ய எண்ணெய் வாங்கி வந்தது.
ரஷ்யா-இந்தியா இடையிலான இந்த எண்ணெய் ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து ரிலையன்ஸ் தற்போது விளக்கம் அளிக்கவில்லை.

ரோஸ்நெஃப்ட் தடை

அதே நேரத்தில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி காரணமாக இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள 50% வரி இந்திய ஏற்றுமதியையும் பாதித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாக கூறியிருந்தாலும், இந்திய அரசு இதை உறுதிப்படுத்தவில்லை. தற்போது வரை இந்திய வெளிவிவகாரத்துறை மற்றும் பெட்ரோலியத்துறை இதுகுறித்து எந்தவித பதிலும் வழங்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+