டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"முஸ்லீம் அடிமைத்தனம்!" இந்த சாலைகளின் பெயரை உடனே மாற்றுங்கள்.. பரபரப்பைக் கிளப்பிய பாஜக

Google Oneindia Tamil News

டெல்லி: முஸ்லீம் அடிமைத்தனத்தை அடையாளப்படுத்தும் சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று டெல்லி பாஜக கோரிக்கை விடுத்துள்ளன.

தலைநகர் டெல்லியில் உள்ள பல முக்கிய சாலைகளின் பெயர்கள் முஸ்லீம் அடிமைத்தனத்தை அடையாளப்படுத்தும் வகையில் உள்ளதால் இந்த சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும் என்பதை டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா வலியுறுத்தி உள்ளார்.

“ஹிட்லர் கதி இதுதான்” - அதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன பெரியார்.. என்ன ஒரு தீர்க்க தரிசனம்!!“ஹிட்லர் கதி இதுதான்” - அதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன பெரியார்.. என்ன ஒரு தீர்க்க தரிசனம்!!

டெல்லியில் உள்ள துக்ளக் சாலை, அக்பர் சாலை, ஔரங்கசீப் லேன், ஹுமாயூன் சாலை மற்றும் ஷாஜகான் சாலைகளின் பெயரை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் கடிதம் எழுதி உள்ளார்.

 முக்கிய சாலைகள்

முக்கிய சாலைகள்

இது தொடர்பாக டெல்லி முனிசிபல் காப்ரேஷனுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இந்த சாலைகளின் பெயரை எப்படி மாற்றலாம் என்பது குறித்தும் சில பரிந்துரைகளை வழங்கி உள்ளார். அதாவது துக்ளக் சாலைக்கு குரு கோவிந்த் சிங் மார்க் என்றும், அக்பர் சாலைக்கு மகாராணா பிரதாப் சாலை என்றும், ஹுமாயூன் சாலைக்கு மகரிஷி வால்மீகி சாலை என்றும், ஷாஜகான் சாலைக்கு ஜெனரல் பிபின் ராவத் சாலை என்றும் பெயர் சூட்ட வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.

 கடிதம்

கடிதம்

மேலும், டெல்லியில் உள்ள ஔரங்கசீப் லேனை அப்துல் கலாம் சாலை என்றும், பாபர் லேனுக்கு சுதந்திர போராட்ட வீரர் குதிராம் போஸின் பெயரை வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் 24, அக்பர் சாலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெயர் மாற்றங்கள் விவகாரத்தில் டெல்லி முனிசிபல் கவுன்சில் குழு தான் இறுதி முடிவை எடுக்கும். டெல்லி முனிசிபல் கவுன்சில் குழு பெயர் மாற்றப் பரிந்துரைகளைப் பெற்று வருகிறது.

 சர்ச்சை

சர்ச்சை

சாலைகள் மற்றும் முக்கிய இடங்களின் பெயர்களை மறுபெயரிடும் போது, வரலாறு, உணர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதேநேரம் கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்த பின்னர், டெல்லி மற்றும் பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற பெயர் மாற்றங்கள் என்பது தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளன.

 இறுதி முடிவு

இறுதி முடிவு

கடந்த 2015ஆம் ஆண்டில் டெல்லி அவுரங்கசீப் சாலை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரைப் பெற்றது. 2016இல் பிரதமர் இல்லம் அமைந்துள்ள டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலை "லோக் கல்யாண் மார்க்" என மாற்றப்பட்டது. இப்போது மேலும், சில சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று டெல்லி பாஜக கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் டெல்லி முனிசிபல் கவுன்சில் குழு இறுதி முடிவை எடுக்க உள்ளது.

 வரலாற்று ஆய்வாளர்கள்

வரலாற்று ஆய்வாளர்கள்

வரலாற்றுடன் முக்கிய தொடர்புகளைக் கொண்ட இடங்களின் பெயர்களை மாற்றக் கூடாது என்பதே வரலாற்று ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது. அதேநேரம் முகலாய மற்றும் காலனித்துவ ஆட்சியில் அடிமைத்தனத்தின் சின்னங்களாக இருந்தவற்றை மாற்றவே பெயர்கள் மாற்றப்படுவதாகத் தெரிவித்து வருகிறது. இத்தகைய பெயர் மாற்றங்கள், கடந்த காலங்களில் மக்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Delhi BJP has asked for names of roads that symbolise Muslim slavery to be renamed: (டெல்லியில் உள்ள முஸ்லீம் பெயர் கொண்ட சாலைகளின் பெயரை மாற்றக் கோரிக்கை விடுத்த டெல்லி பாஜக) BJP asked for renaming important roads in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X