77வது குடியரசு தின விழா.. டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
டெல்லி: இந்தியாவின் 77வது குடியரசு தினம் நாடு முழுக்க இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளான குடியரசு தினத்தையொட்டி இன்று டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

குடியரசு தின விழா
ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானங்கள், டி-90 பீரங்கிகளும், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள், மத்திய அமைச்சகங்கள் சார்பில் 30 அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் வந்தன. இதேபோன்று 2,500 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், ரஃபேல், சுகோய் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாட்டின் 77 ஆம் ஆண்டு குடியரசு தின விழா நாடு முழுக்க உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுவிட்டன.
இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற்றனர். ஐரோப்பிய இந்திய உறவுகளை மேம்படுத்துவது, வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த அழைப்பானது விடுக்கப்பட்டது. குடியரசு தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள்
இன்று காலை 10.30 மணியளவில் டெல்லி கடமைப் பாதையில் ராணுவ அணிவகுப்பு தொடங்கியது. பிரதமர் மோடி இதற்காக காலை 9.30 மணியளவில் போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். இதனை அடுத்து திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கீதம் இயக்கப்பட்டது. மேலும் 21 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து பூக்களும் தூவப்பட்டன.
நடப்பு ஆண்டில், '150 ஆண்டுகால வந்தே மாதரம்' மற்றும் 'தற்சார்பு இந்தியா' என்ற மையக்கருத்துக்களின் அடிப்படையில் குடியரசு தின விழாவானது கொண்டாடப்படுகிறது. அரசின் திட்ட பயனாளிகள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். ராணுவ அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பலத்த பாதுகாப்பு
குறிப்பாக ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானங்கள் அணிவகுப்பில் இடம்பெற்றன. இதேபோன்று டி-90 பீரங்கிகளும் அணிவகுப்பில் இடம்பெற்றன. நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை விளக்கும் வகையில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களின் சார்பிலும், மத்திய அமைச்சகம் சார்பிலும் என மொத்தம் சுமார் 30 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் வந்தன.
தொடர்ந்து குடியரசு தின விழாவில் 2,500 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ரஃபேல், சுகோய் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 29 ஆம் தேதி விஜய் சவுக் பகுதியில் நடைபெறும் பாசறை திரும்புதல் நிகழ்ச்சியுடன் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நிறைவடையும்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications