ஓய்வுபெற்ற வெளியுறவு அதிகாரியின் மனைவியை அடித்துக்கொன்ற வாட்ச்மேன்.. பணம் நகை கொள்ளை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஓய்வு பெற்ற வெளியுறவு அமைச்சக அதிகாரியின் மனைவியை கொன்றுவிட்டு அவர்களது வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகள் என அனைத்தையும் கொள்ளையர்கள் அள்ளிச்சென்றனர். பாதுகாப்புக்கு இருந்த வாட்ச்மேனே தனது கூட்டாளிகளுடன் இந்த படுகொலையை அரங்கேற்றி உள்ளதாக முதற்கட்ட
தகவல்கள் வெளியாகி உள்ளன.

தென்மேற்கு டெல்லியின் சஃப்தர்ஜங் என்க்ளேவில் 94 வயதான ஓய்வுபெற்ற வெளிவிவகார அமைச்சக அதிகாரி பி ஆர் சாவ்லா . அவரது 88 வயது மனைவி காந்தா சாவ்லா உடன் தனியாக வசித்து வந்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் இரு பிள்ளைகளும் உயிரிழந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தனர்.

Retired Foreign Ministry Officers Wife Stabbed To Death By Robbers In Delhi

சனிக்கிழமை இரவு 9 மணியளவில் அண்மையில் நியமிக்கப்பட்ட அவர்களது கட்டிடத்திற்கு வேலைக்கு சேர்ந்த வாட்ச் மேன் தனது இரு மூன்று கூட்டாளிகளுடன் ஓய்வுபெற்ற வெளிவிவகார அமைச்சக அதிகாரி பி ஆர் சாவ்லாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.

வாட்ச் மேனும் அவரது கூட்டாளிகளும் சாவ்லா வீட்டிற்குள் குதித்து, தம்பதியினரைக் அடித்து உதைத்து சோபாவில் உட்காரும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்கள். அப்போது காந்தா சாவ்லா கொள்ளை முயற்சியை எதிர்க்க முயன்றபோது, அந்த மூன்று பேரில் ஒருவன் கூர்மையான ஆயுதத்தால் குத்தியுள்ளான். இதில் அவர் மயக்கமடைந்து
சோபாவில் விழுந்துள்ளார்.

இதன் பின்னர் கொள்ளையர்கள் சாவ்லாவின் படுக்கையறைக்குச் சென்று அலமாரியில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகள் அனைத்தையும் எடுத்துச் சென்று தப்பி ஓடிவிட்டனர். சாவ்லா தனது மனைவி காயமடைந்து கிடந்தத்தை, வீட்டிற்கு வெளியே சென்று குடியிருப்பாளர்கள் நலச் சங்கத் தலைவருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து
பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சேர்ந்து சாவ்லாவின் மனைவி காந்தா சாவ்லாவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இது குறித்த புகாரையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து உள்ளதாகவும், சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+