சஞ்சய் சிங்கிற்கு எதிர்ப்பு.. பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக பஜ்ரங் புனியா அறிவிப்பு
டெல்லி: மல்யுத்த சம்மேளன தலைவராக சஞ்செய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனக்கு அளிக்கப்பட பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர் வீராங்கனைகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பின. குறிப்பாக நாட்டின் முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் அவரை கைது செய்ய கோரி மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார். இதனைத்தொடர்ந்து, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் மத்திய அமைச்சரிடம் நேரடியாக முறையிட்டு இருந்தனர். எனினும், மல்யுத்த சம்மேளனத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சஞ்செய் சிங் தலைவராக தேர்வு ஆகியுள்ளார்.
இது மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதையடுத்து 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். 'நீதிக்காக நாங்கள் உணர்வுபூர்வமாக முழுமூச்சுடன் போராடினோம். ஆனால் கடைசியில் பிரிஜ் பூஷனின் நெருங்கிய கூட்டாளியே தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றால் இனி எப்படி மல்யுத்த களத்தில் நீடிக்க முடியும். இத்துடன் மல்யுத்தத்தில் இருந்து விடைபெறுகிறேன்" என்று கூறினார்.
இந்த நிலையில், மல்யுத்த சம்மேளன தலைவராக சஞ்செய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக மல்யுத்த போட்டியில் வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை பஜ்ரங் புனியா வென்றுள்ளர். சஞ்செய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர்கள் காட்டும் இந்த எதிர்ப்புக்கு மத்திய அரசு இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications