பணக்காரர்களால் தான் டெல்லியில் காற்று மாசுபாடு.. கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம்.. அதிரடி உத்தரவு
டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கடைப்பிடித்து அதற்கேற்ப வசதி படைத்த மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள தயங்குவதே முக்கியக் காரணம் என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையாக உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலம் என்பதால் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் காற்று மாசுபாடு மட்டும் குறையவே இல்லை.
இந்நிலையில் தான் டெல்லி காற்று மாசுபாடு விவகாரத்தில் Amicus Curiae ஆக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங், உச்ச நீதிமன்றத்தில் ஒரு புகாரை தெரிவித்தார்.
இந்நிலையில் தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஜி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அவர் உச்ச நீதிமன்றத்தின் பல உத்தரவுகளுக்குப் பிறகும், டெல்லி-என்சிஆர் குடியிருப்பாளர்களுக்கு தொடர்ந்து கடுமையான சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தும் அளவுக்கு காற்று மாசுபாடு நிலவி வருவதாகவும், நடைமுறைகள் மெதுவாகவே செயல்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அபராஜிதா சிங், "காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்துவது மந்தமாக உள்ளது. ஒவ்வொரு நடைமுறைகளும் மெதுவாக பின்பற்றப்பட்டு வருகிறது'' என்று கூறினார். இதனை கேட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தியடைந்தனர். மேலும் அவர்கள், , "உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தும் நிலைமை மாறவில்லை. இதற்கு என்ன தீர்வு? செயல்படுத்தக்கூடிய நடைமுறை சாத்தியமான உத்தரவுகளை நாங்கள் பிறப்பிக்க வேண்டும். இல்லையெனில், மக்கள் தொடர்ந்து விதிகளை மீறுவார்கள். மக்கள் காலத்தின் தேவையைப் புரிந்துகொண்டு தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
வசதி படைத்தவர்கள் கட்டுப்பாடுகளுக்கு இணங்குவதில்லை, தொடர்ந்து டீசல் எரிபொருள் அதிகம் நுகரும் கார்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் பிற மாசுபடுத்தும் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். வாகனங்களால் ஏற்படும் மாசுபாடு தலைநகரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மூச்சுத் திணற வைக்கிறது. இந்த மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டு துன்பப்படுபவர்கள் ஏழைகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் தான்" என்று கூறினர்.
மேலும் அனைத்து வழக்கறிஞர்களும் டெல்லி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அபராஜிதா சிங்கிடம் தாக்கல் செய்ய வேண்டும். அவர் அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வாதம் முன்வைப்பார் என்று கூறி வழக்கை நாளைய தினத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications