எங்கள் ஆட்சியில் விலைவாசி இப்படி கூடியிருந்தால் மக்கள் எங்களை நடமாடவே விட்டிருக்க மாட்டார்கள்: லாலு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிகாரத்தை சுவைக்க வேண்டி, இந்த நாட்டை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று, ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் 25வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தனது தொண்டர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார்.

உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், முழுவதும் சிகிச்சை நிறைவடைந்ததும் பாட்னா செல்ல திட்டமிட்டுள்ளார்.

நேரலையில் பார்த்த தொண்டர்கள்

நேரலையில் பார்த்த தொண்டர்கள்

நேற்றைய உரையின்போதும், விரைவில் பாட்னா வருவேன் என்பதை அவர் குறிப்பிட்டார். மாநிலம் முழுக்க சுற்றுப் பயணம் சென்று, மக்களை சந்திக்க உள்ளதாக தனது உரையில் அவர் தெரிவித்தபோது, பாட்னாவிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேரலையில் டிவியில் இதை பார்த்த தொண்டர்கள் உற்சாகமாக கை தட்டி வாழ்க கோஷங்களை எழுப்பியதை பார்க்க முடிந்தது.

கரகோஷம்

கரகோஷம்

லாலு பிரசாத் யாதவ் தனது பேட்டியில், பீகாரில் ஆட்சி செய்து வரும் நிதிஷ்குமார்-பாஜக கூட்டணியை மட்டுமின்றி, மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார். மத்திய அரசை லாலு பிரசாத் விமர்சனம் செய்தபோதும் தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர்.

பணமதிப்பிழப்பால் மக்கள் நிலைமை மோசமாகிவிட்டது

பணமதிப்பிழப்பால் மக்கள் நிலைமை மோசமாகிவிட்டது

இதோ, லாலு பேச்சிலிருந்து, மத்தியில் நடைபெறும் பாஜக கூட்டணி அரசில் விலைவாசி உயர்ந்து விட்டது. வேலைவாய்ப்பு இன்மை பெருகிவிட்டது. மக்களின் முதுகெலும்பு இதனால் உடைபட்டு போய்விட்டது. ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு ஆகியவற்றின் காரணமாக நாட்டில் பொருளாதார சிக்கல் நிலவிக் கொண்டிருக்கிறது.

நாட்டை அழிக்கிறார்கள்

நாட்டை அழிக்கிறார்கள்

இது ஒருபக்கம் என்றால், மக்கள் மத்தியில் ஒற்றுமையை குறைப்பதற்கு இன்னொரு பக்கம் சதிச் செயல்கள் நடந்து வருகின்றன. அயோத்தி பிரச்சினைக்கு பிறகு சிலர், மதுரா பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக இந்த நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் நடமாட விட்டிருக்க மாட்டார்கள்

மக்கள் நடமாட விட்டிருக்க மாட்டார்கள்

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது நாட்டுக்கு நல்லது கிடையாது. எங்களது ஆட்சி காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்த அளவுக்கு உயர்ந்து இருந்தால் மக்கள் எங்களை தெருவில் நடமாட விட்டிருக்க மாட்டார்கள். கட்சியின் கொள்கையில் இருந்து நான் என்றுமே பின்வாங்க மாட்டேன். கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் தங்கள் நம்பிக்கையை இழந்து விடாமல் கட்சிப் பணியாற்ற வேண்டும். இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+