திருமாவளவன் கனவில் நிலநடுக்கம்.. தேஜ்பிரதாப் யாதவ் கனவில் வந்த கடவுள் கிருஷ்ணர்- பரபர வீடியோ!
டெல்லி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கனவில் நிலநடுக்கம் கண்ட மறுநாளே டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது என விசிக எம்பி ரவிக்குமார் கூறியிருந்தார். இந்த வரிசையில் லாலு பிரசாத் மகனும் பீகார் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், தமது கனவில் கடவுள் கிருஷ்ணரை கண்டதாக ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலையை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வட இந்தியாவின் பகுதிகள் அதிர்ந்தன.

இந்த நிலநடுக்கம் தொடர்பாக விசிக எம்பி ரவிக்குமார் சமூக வலைதளங்களில் பதிவிடுகையில், நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் தலைவர் Thol.Thirumavalavan அவர்கள் வேறு சில நண்பர்களோடு கடைவீதிக்குப் போயிருந்தார். அதன் பின்னர் தொலைபேசியில் தயாளன் அவருக்குத் தகவலைச் சொன்னார். அதைக் கேட்டு விட்டு உடனடியாக அவர் வீடு திரும்பினார். வீடு திரும்பியதும் அவரிடம் எனது அனுபவத்தைச் சொன்னேன். அதற்குள் தொலைக்காட்சி சேனல்களில் நிலநடுக்கம் குறித்த செய்திகள் வரிசையாக ஒளிபரப்பாகத் தொடங்கி இருந்தன. அதைப் பார்த்தபடியே அவர் சொன்னார்: " நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன். நான் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று நிலம் பிளக்கிறது. எல்லாம் அந்தப் பிளவுக்குள் சரிகின்றன. நான் தாவி ஒரு சுவரைப் பிடித்துக் கொள்கிறேன்.அப்படியே விழித்துக் கொண்டு விட்டேன் " என்று கூறினார். ' நடப்பதை முன் உணரும் ஆற்றல் ( premonition) சிலருக்கு உண்டு என்று சொல்வார்கள் ' என்று நான் அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது காப்ரியல் கார்ஸியா மார்க்யெஸ் எழுதிய ஒரு சிறுகதை எனக்கு நினைவுக்கு வந்தது என எழுதியிருந்தார்.

இதேபோல் இப்போது பீகார் அமைச்சர் தேஜ்பிரதாப் யாதவ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரது கனவில் மகாபாரத யுத்தம் நடைபெறுகிறது; பின்னர் கடவுள் கிருஷ்ணர் தோன்றுகிறார். அதாவது தாம் கனவில் கடவுள் கிருஷ்ணரை கண்டதாக அந்த ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
தேஜ்பிரதாப் ஏற்கனவே தம்மை கிருஷ்ணர், சிவன் போன்ற கடவுளர்களாக சித்தரித்து வீடியோக்களை வெளியிட்டவர். அண்மையில் திடீரென சைக்கிளில் பயணம் மேற்கொண்டார். அப்போது முலாயம்சிங் யாதவ் தமது கனவில் வந்து ஆசீர்வதித்தார்; அவரது கொள்கைப்படி சைக்கிளில் செல்கிறேன் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
विश्व रूप दर्शन योग मैं मुकुट से सुशोभित चक्र और गदा से सुसज्जित शस्त्रों के साथ सर्वत्र दीप्तिमान लोक के रूप में आपके रूप को देख रहा हूँ। इस चमचमाती अग्नि में आपके तेज को देख पाना कठिन है जो सभी दिशाओं से प्रस्फुटित होने वाले सूर्य के प्रकाश की भांति है। pic.twitter.com/tqcrkKH5Qo
— Tej Pratap Yadav (@TejYadav14) March 22, 2023
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications