சுவிட்சர்லாந்து பெண்ணை கழிவறைக்குள் தள்ளி, கான்ஸ்டபிள் செய்யுற வேலையா அது! தேஜஸ் எக்ஸ்பிரஸில் ஷாக்!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெளிநாட்டு பெண்ணிடம் காவலர் ஒருவர் தவறாக நடந்ததாக புகார் எழுந்துள்ளது
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து கழிவறைக்குள் சுவிட்சர்லாந்து பெண்ணை காவலர் முத்தமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் ரயிலில் வைத்தே காவலரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
டெல்லியில் இருந்து லக்னோவிற்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் முதல் வகுப்பு பெட்டியில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது வருங்கால கணவரும் இருந்தார். மேற்கண்ட ரயில் ஹத்ராஸ் அருகே வந்து கொண்டிருந்தது.
அந்த பெண் ரயிலில் இருந்த கழிவறைக்குச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து கழிவறையில் இருந்து அந்த 21 வயது இளம் பெண் வெளியே வந்தார். அப்போது பாதுகாப்பிற்கு நின்றிருந்த ரயில்வே கான்ஸ்டபிள் ஜிதேந்திரா என்பவர், அந்தப் பெண்ணின் கையை வலுக்கட்டாயமாக பிடித்து மீண்டும் கழிவறைக்குள் இழுத்து முத்தமிட்டதாக கூறப்படுகிறது.

அலறியடித்து வந்தார்
ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலரே பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தால் அந்த ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே அந்தப் பெண் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி தனது இருக்கைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த தனது வருங்கால கணவரிடம் நடந்த விஷயத்தை தெரிவித்துள்ளார்.

ஜிதேந்திரா காவலர்
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சுவிட்சர்லாந்து பெண்ணின் வருங்கால கணவர், அந்த ரயில் கான்பூர் சென்ட்ரலுக்கு வந்தவுடன் குற்றம் சாட்டப்பட்ட ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் ஜிதேந்திரா குறித்து போலீசில் புகார் அளித்தார்.

என்ன நடந்தது
அவர்கள் உடனடியாக ஜிதேந்திராவை கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ரயில்வே இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா திவேதி கூறுகையில், "கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் ஜிதேந்திரா பெரோசாபாத் பகுதியை சேர்ந்தவர், சுமார் ஒன்றரை ஆண்டுகளாக கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணியில் உள்ளார். அவர் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது வெளிநாட்டு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் வந்துள்ளது.

விசாரணை
குற்றம் சாட்டப்பட்ட காவலர் ஜிதேந்திரா மீது கான்பூர் மத்திய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட காவலரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் சிறைக்கு அனுப்பி உள்ளோம். அதே நேரம், ரயில்வே போலீசில் இதுபோன்று பயணிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட மேலும் சில காவலர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" இவ்வாறு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா திவேதி கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications