கொரோனாவால் பாதித்த துறைகளுக்கு ஊக்கம்.. ரூ.1.1 லட்சம் கோடி கேரண்டி..நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அரசு உத்தரவாதத்துடனான 1.1 லட்சம் கோடி நிதி திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதில் 50 லட்சம் அளவுக்கு சுகாதாரத்துறையில் ஒதுக்கப்படும்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது அவர் கொரோனா நிவாரண நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்.

 Rs 1.1 lakh crores credit guarantee scheme and Rs 50,000 crores for health sector, says Union Finance Minister Nirmala Sitharaman

சுகாதாரத்துறை தொடர்பான திட்டங்கள் 8 மெட்ரோ நகரங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கனவே உள்ள சுகாதார திட்டங்கள் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காகும் பணத்திற்கு மத்திய அரசு கேரண்டி வழங்கும். இந்த கேரண்டியில் 50 சதவீதம் ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கத்திற்கும், 75 சதவீதம் புதிய திட்டங்களுக்காகவும் செலவிடப்படும். 3 வருடங்களுக்கு ரூ.100 கோடி அளவுக்கு லோன் வழங்கப்படும். இதற்கான வட்டி 7.95 சதவீதம் என்ள அளவுக்கு நிர்ணயிக்கப்படும். தேசிய கிரெடிட் கேரண்டி டிரஸ்ட்டி கம்பெனி லிமிட்டட் இதற்கான கேரண்டியை வழங்கும்.

எஞ்சிய 60,000 கோடி கொரோனாவால் பாதிப்புக்குள்ளான பிற துறைகளுக்கு ஒதுக்கப்படும். இந்த துறைகளுக்கான கடனுக்கு வட்டி 8.25 சதவீதம் என்று நிர்ணயிக்கப்படும். வழக்கமாக இந்த துறைகளுக்கு கேரண்டி இல்லாவிட்டால் 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் நாட்டின் பல துறைகளும் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ள நிலையில், அதனை போக்குவதற்காக அரசு தரப்பில் இருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போல பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை எடுத்த நிலையில், இப்போதும் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து அதற்கான சலுகைகளை அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+