இந்தியர்கள் குறைந்தது 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.. இல்லையெனில்! மோகன் பகவத் சொல்றதை பாருங்க
டெல்லி: மக்கள் தொகை குறைந்தால் சமூகம் இல்லாமல் அழிந்துவிடும் என்றும், இந்தியர்கள் குறைந்தது மூன்று குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். மோகன் பகவத்தின் இந்தக் கருத்துக்கு பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்றன. இதனால், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை அளிக்கப்படுகின்றன. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் தற்போது இந்தியா உள்ளது. 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 138 கோடியிலிருந்து 142 கோடியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2060 ஆம் ஆண்டில் தான் இந்தியாவில் மக்கள் தொகை உச்சம் தொடும் எனவும், அதன்பிறகே மக்கள் தொகை குறையத்தொடங்கும் என உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. அதேவேளையில், இந்தியாவில் தற்போது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறையத்தொடங்கியிருப்பதாகவும் இது கவலைக்குரிய ஒன்று என்ற பேச்சுக்களும் அடிபட தொடங்கியுள்ளன.
அந்த வகையில், பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மக்கள் தொகையை குறைந்து வருவது கவலை அளிப்பதாக பேசியிருக்கிறார். நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத் கூறியதாவது:- மக்கள் தொகை குறைந்து வருவது கவலை அளிக்கிறது. ஒரு சமூகத்தின் பிறப்பு விகிதம் 2.1 சதவிகிதத்திற்கும் கீழ் குறையும் போது சமூகம் அழிவை எதிர்கொள்கிறது என்று மாடர்ன் டொமகிரபிக் ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
நமது நாட்டின் மக்கள் தொகை கொள்கை 1998 அல்லது 2002 ல் உருவாக்கப்பட்டது. அதில் தெளிவாக ஒரு விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஒரு சமூகத்திலும் பிறப்பு விகிதம் 2.1 க்கு கீழ் குறையக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே பிறப்பு சதவிகிதம் 2.1 க்கு கீழ் குறைந்தால் அந்த சமூகம் அழிவை எதிர்கொள்கிறது.
வெளியில் இருந்து எந்த அச்சுறுத்தலும் தேவையில்லை. தானாகவே அது மறைந்துவிடும். பல மொழிகளும் சமூகங்களும் இல்லாமல் போய்விட்டன. எனவே, நமது மக்கள் தொகை 2.1 சதவிகிதத்திற்கு கீழ் போகக் கூடாது. எனவே இதில் குறைவு ஏற்பட்டால் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மோகன் பகவத்தின் இந்த பேச்சு அரசியல் ரீதியில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. பீகாரில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி இது தொடர்பாக கூறுகையில், "பாஜகவை சேர்ந்தவர்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்து பேசி வருகிறார்கள். தற்போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனப் பேசி வருகிறார்.
ஆர்.எஸ்.எஸும் பாஜகவும் முதலில் தங்கள் சொந்த முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு பிரசாரம் மேற்கொள்ளும் போது இது போன்று பேசுவது அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் மோகன் பகவத் பேச்சை விமர்சித்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அரவிந்த் நிஷாத் கூறுகையில், "இது போன்று பேசுவதற்கு முன்பாக மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பாக அடிக்கடி பேசும் பாஜகவுடன் மோகன் பகவத் கலந்து ஆலோசிக்க வேண்டும். பெண்களுக்கு கல்வியை அதிகம் கொடுப்பதன் மூலமே மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும்" என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications