அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு.. வரலாறு காணாத வீழ்ச்சி!
டெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையான சரிவைச் சந்திந்துள்ளது. இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பதட்டங்கள் அதிகரித்ததன் மத்தியில் 88.30 என்ற அளவுக்கு சரிவைப் பதிவு செய்துள்ளது இந்திய ரூபாய்.
அமெரிக்கா, இந்தியா மீது விதித்துள்ள அதீத வரிகள் காரணமாகவும், தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி காரணமாகவும் மாத இறுதியில் டாலரின் தேவை அதிகரித்த நிலையில் ஏற்பட்ட நெருக்கடியின் மத்தியில் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியைக் கண்டு வருகிறது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், நேற்று முன்தினம், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 87.73 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், நேற்று எப்போதும் இல்லாத வகையில் குறைந்தபட்சமாக ரூ.88.30 ஐ தொட்டது. பின்னர், 88.21 என்ற நிலையை எட்டியது. நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சரிவின் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் ரூபாய் மதிப்பு 0.68% சரிந்தது.
ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் இந்தியப் பொருட்கள் மீதான 50 சதவிகித அமெரிக்க வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளதால், இறக்குமதியாளர்களிடமிருந்து வலுவான டாலர் தேவை ஏற்பட்டதால், இந்திய ரூபாயின் மதிப்பானது தனது வேகத்தை இழந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த பிப்ரவரியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதன் முந்தைய மிகக் குறைந்த அளவான 87.95 ஐ எட்டியது. இந்நிலையில் தற்போது மேலும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் கரன்சி ரூபாய் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய கடன் மற்றும் பங்குகளில் 9.7 பில்லியன் டாலர்களை விற்றுள்ளனர். கூடுதல் அமெரிக்க வரிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு அமர்வுகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் இருந்து 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக திரும்பப் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2% ஆகும். ஜவுளி மற்றும் நகைகள் போன்ற தொழிலாளர் மிகுந்த தொழில்களில் கூர்மையான மந்தநிலை வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கும் மற்றும் பொருளாதார தாக்கத்தை மோசமாக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications