பிபிசியில் நடந்த ரெய்டு.. நறுக்கென கேட்ட பிரிட்டன் அமைச்சர்.. அதிரடியாக பதிலளித்த ஜெய்சங்கர்
ஜி20 மாநாட்டுக்கு இடையே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை பிரிட்டன் அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி சந்தித்து பேசினார். அப்போது, பிபிசியில் நடத்தப்பட்ட ரெய்டு விவகாரத்தை ஜெய்சங்கரிடம் அவர் எழுப்பினார்.
டெல்லி: பிபிசியில் வருவாய் வரித்துறை ரெய்டு நடத்திய விவகாரத்தை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி இன்று எழுப்பினார்.
ஜேம்ஸ் கிளவர்லி கூறுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ஜெய்சங்கர், இறுதியில் அதிரடியாக பதிலளித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய பிறகு, முதன்முறையாக அதுகுறித்து இந்திய - பிரிட்டன் அமைச்சர்கள் நேருக்கு நேர் பேசிக்கொண்டது இதுவே முதன்முறையாகும்.

மோடியை சீண்டிய பிபிசி
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தை மையமாக வைத்து இரு ஆவணப்படங்களை பிபிசி ஊடகம் அண்மையில் வெளியிட்டது. குஜராத்தில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும், அந்தக் கலவரத்துக்கும் தொடர்பு இருக்கும் வகையில் அந்த ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த ஆவணப்படத்தை சமூக வலைதளங்கள் அனைத்தில் இருந்தும் மத்திய அரசு தடை செய்தது. மேலும், இந்த ஆவணப்படத்தை திரையிடுதவற்கும் தடைவிதிக்கப்பட்டது.

அதிர வைத்த ரெய்டு
எனினும், மத்திய அரசின் தடையை மீறி நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிலையங்களிலும், பொதுவெளிகளிலும் இந்த ஆவணப்படங்களை மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் திரையிட்டனர். இதன் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சர்வேயில் ஈடுபட்டனர். இது, மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

சீறிய பிரிட்டன்
இந்நிலையில், பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட இந்த ரெய்டை கண்டிக்கும் வகையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் உணர்ச்சி பொங்க பேசினர். எந்த நாடாக இருந்தாலும் ஊடக சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். மேலும், பிபிசியின் குரல்வளையை நெரிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த ரெய்டு விவகாரத்தை இந்தியாவிடம் எழுப்ப வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அமைச்சரின் அதிரடி பதில்
இந்த சூழலில், இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி இன்று காலை டெல்லி வந்தார். பின்னர், இந்த மாநாட்டுக்கு இடையே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை ஜேம்ஸ் கிளவர்லி சந்தித்து பேசினார். அப்போது, பிபிசியில் நடத்தப்பட்ட ரெய்டு விவகாரத்தை சற்று குரலை உயர்த்தி ஜெய்சங்கரிடம் அவர் எழுப்பினார். கிளவர்லி கூறியதை பொறுமையாக கேட்ட ஜெய்சங்கர் கடைசியில், "யாராக இருந்தாலும் எந்த நிறுவனமாக இருந்தாலும், இந்தியாவில் அவை செயல்பட்டால் எங்கள் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்" என அதிரடியாக பதிலளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications